வரதட்சணை விவகாரம்.. வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் குடும்பம்.. கடப்பாரையால் பதில் சொன்ன மனைவி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மயிலாடுதுறை அருகே தனது கணவருடன் தன்னை சேர்த்துவைக்கும்படி பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். மேலும், கணவரது வீட்டு கதவை கடப்பாரையால் உடைத்து அவர் உள்ளே சென்றது உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | அட.. இவ்வளவு பக்கத்துலயே இருந்திருக்கு.. மனிதர்கள் வசிக்க உகந்த கிரங்கங்களின் தேடல்.. புதிய அத்தியாயத்தை எழுத துவங்கும் ஆராய்ச்சியாளர்கள்..!
திருமணம்
திருவாரூர் மாவட்டம், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா. இவருக்கும் மயிலாடுதுறை மன்னம்பந்தலைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்தின்போது 24 சவரன் நகை, இருசக்கர வாகனம் மற்றும் 3 லட்ச ரூபாய் மதிப்பில் சீர் வரிசை உள்ளிட்டவைகளை மணமகன் வீட்டாருக்கு பிரவீனா வீட்டினர் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து நடராஜன் - பிரவீனா ஆகிய இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், மாமனார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தன்னை தரக்குறைவாக பேசியதுடன், தாக்கியதாகவும் இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் பிரவீனா தெரிவித்திருக்கிறார். மேலும், தான் வீடு திரும்பும் நேரத்தில் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கும் பிரவீனா, அங்கிருந்த கடப்பாரை கொண்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார். இதனால் அந்த கிராமமே பரபரப்புடன் காணப்பட்டது.
போராட்டம்
மேலும், தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பப்படுவதாகவும் பிரவீனா தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில்,"திருமணமாகி நான் இந்த வீட்டில் தான் வசித்துவந்தேன். சமீபத்தில் எனது மாமனார் மற்றும் அவரது சகோதரர் எனக்கு என்னுடைய பெற்றோர் வழங்கிய நகைகள் குறித்து தரக்குறைவாக பேசியதுடன், என்னை தாக்கி வெளியேற்றினர். நான் எனது பெற்றோரிடம் இதனை தெரிவித்ததுடன், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினேன். இந்நிலையில் கணவர் வீட்டுக்கு நான் வருவதை அறிந்த அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்" என்றார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் நடராஜன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது கணவருடன் தன்னை சேர்த்துவைக்கும்படி போராடிய மனைவி, கணவர் வீட்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இது மனிதாபிமானமற்ற செயல்.! திருமணம் உடல் சார்ந்தது மட்டும் இல்ல".. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு அட்வைஸ்..!
- "சேர்த்து வைங்க"... கணவரை தேடி வந்து கண்ணீர் சிந்திய முன்னாள் காதலி.. முன்னின்று கல்யாணமே பண்ணி வைத்த மனைவி.!
- மனைவிக்கு கணவர் அனுப்பிய கடைசி மெசேஜ்.. 2 மாதம் கழித்து தெரிய வந்த உண்மை.. "ஒட்டுமொத்த குடும்பமும் ஆடி போச்சு"
- "கல்யாணம் ஆகி 8 வருசம் கழிச்சு".. கணவர் பத்தி மனைவிக்கு தெரிஞ்ச 'உண்மை'.. "இத கண்டுபிடிக்கவே எனக்கு இத்தனை நாள் ஆயிடுச்சு"
- "பார்த்துக்குறது சுமை.. பாச மகனுக்கு பாரமா இருக்க கூடாது.!" - முதிர்ந்த தம்பதி எடுத்த இதயம் நொறுங்கும் முடிவு.!
- "கூட போறது என் பொண்டாட்டி மாதிரியே இருக்கே".. டூ வீலரை மடக்கிய கணவர்.. சிக்கிய மனைவி.! அதுக்கு அப்றம் நடுரோட்லயே நடந்த பரபரப்பு சம்பவம்.!
- திருநங்கையுடன் 'காதல்'!!.. ஓகே சொன்ன 'மனைவி'.. இரண்டாவது திருமணம் செய்த வாலிபர்!!.. வைரலாகும் ஃபோட்டோஸ்!!
- வெளிநாட்டில் இறந்த கணவர்.. உடலை கேட்டு கதறும் மனைவி.. "இன்னும் எத்தனை அரியநாச்சிகள் வேண்டும்..??" - கொந்தளித்த க/பெ ரணசிங்கம் இயக்குனர்.!
- கணவருக்கு இருந்த நோய்.. எந்த Test'ம் பண்ணாம கண்டுபிடித்த மனைவி.. "எப்படின்னு தெரிஞ்சு ஒட்டுமொத்த மருத்துவர்களும் திகைச்சு போய்ட்டாங்க"
- "இந்த காலத்து இளைஞர்கள் மனைவினாலே தொல்லைன்னு நினைக்கிறாங்க".. விவாகரத்து வழக்கில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!