‘மிக்ஸியை விற்று குடித்த கணவன்’.. மனைவி கொடுத்த கொடூர தண்டனை..! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மிக்ஸியை விற்று குடித்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி உமாதேவி. இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெங்கடேசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் வீட்டில் இருந்தவாறு காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது மது பழக்கத்துக்கு அடிமையானவர், வீட்டில் உள்ள பொருட்களை விற்று குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 17ம் தேதி வெங்கடேசன் பைக்கில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து நடந்த பிரேத பரிசோதனையில் வெங்கடேசன் கட்டையால் அடித்து இறந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவதன்று வீட்டில் இருந்த மிக்ஸி காணாமல் போனது குறித்து வெங்கடேசனிடம் அவரது மனைவி கேட்டுள்ளார். அதற்கு, மிக்ஸியை விற்றுதான் மது குடித்துவிட்டு வந்தேன் என வெங்கடேசன் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த உமாதேவி அருகில் இருந்த கட்டையால் அவரை தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்து வெங்கடேசன் மயங்கி விழுந்துள்ளார். இது வெளியே தெரியாமல் இருக்க பைக்கில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக உமாதேவி நாடகமாடியது போலீசார் நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டில் இருந்த மிக்ஸியை விற்று மது குடித்த கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மிரண்டு முட்டித் தூக்கிய காளை’!.. ‘சரிந்த குடல்’! அப்பாவை காப்பாற்ற போராடிய மகன்..! மிரள வைத்த சம்பவம்..!
- கட்டாயப்படுத்தி ‘போதைப் பொருளுக்கு’ பழக்கி.. ‘கணவர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘பெண் மருத்துவருக்கு’ நேர்ந்த கொடூரம்..
- ‘வளர்ப்பு நாயுடன் வாக்கிங்’ சென்ற கர்ப்பிணி மனைவியின் ஃபோன் காலால்.. ‘பதறியடித்து ஓடிய’ கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..
- தண்டவாளம் அருகே முட்புதரில் கிடந்த பெண் சடலம்..! தகாத உறவால் கொலையா..? பரபரப்பு சம்பவம்..!
- ‘எப்பவும் போலதான் அடிச்சேன்’ ‘ஆனா அப்பா...!’ ஒற்றை வரியில் மகன் சொன்ன பதில்..! சென்னையில் பரபரப்பு..!
- பட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர்..! ‘அடுத்து செய்த அதிர்ச்சி காரியம்’! பதற வைத்த தூத்துக்குடி சம்பவம்..!
- 'ரொம்ப த்ரில்லா இருக்கு'! 'நீங்க பாத்து போங்க'.. 'பாராகிளைடிங்'கால் பறிபோன புதுமாப்பிள்ளை உயிர் ..! தம்பி உருக்கம்..!
- 'பழைய' பகை.. 'ரத்த' வெள்ளத்தில் சரிந்த இளைஞர்.. பேஸ்புக்கில் போட்டோ 'பகிர்ந்த' கேங்ஸ்டர்கள்!
- ‘வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்’!.. மகளை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய தாய்..! அதிர வைத்த காரணம்..!
- 'சொன்னா கேக்க மாட்ட?'.. கள்ளக்காதல் உறவை கைவிடாத நபர்.. நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்!