தொழில் போட்டி...மகன்-மருமகனுடன் சேர்ந்து.. கணவரை 'தீர்த்துக்கட்டிய' மனைவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தொழில் போட்டி காரணமாக மனைவியே,மகனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொழில் போட்டி...மகன்-மருமகனுடன் சேர்ந்து.. கணவரை 'தீர்த்துக்கட்டிய' மனைவி!

நாகை மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மதியழகன்(43) என்பவர் மேடை அலங்கார பொருட்களை வாடகைக்கு விடும் கடையொன்றை நடத்தி வந்துள்ளார். இவரின் மனைவி விஜயலட்சுமி.இவர்களுக்கு வருண்(19),விமல்(17) என இரண்டு மகன்களும்,மோனிஷா(21) என்ற மகளும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் 5 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.மகள்-மகன்களுடன் விஜயலட்சுமி தனியாக வசித்து வருகிறார். கணவரை விட்டு பிரிந்த விஜயலட்சுமியும் மேடை அலங்கார தொழில் ஆரம்பித்து அதனை இளைய மகன் விமலிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆனால் கணவரின் கடைக்கே ஆர்டர்கள் குவிய,அதனை பொறுத்துக்கொள்ள முடியாத விஜயலட்சுமி விமல் மற்றும் தனது அண்ணன் மகன் சத்ரியன் ஆகியோருடன் இணைந்து கணவரைக் கொல்ல திட்டம் தீட்டியுள்ளார்.அதன்படி நேற்று முன்தினம் கடையைப் பூட்டிவிட்டு வந்த மதியழகனை விமல்,சத்ரியன் இருவரும் சேர்ந்து இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.தொடர்ந்து மதியழகன் இறந்ததை உறுதி செய்து  சென்றுள்ளனர்.

மதியழகன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் மேற்கண்ட உண்மைகள் வெளியாகியுள்ளன.தற்போது போலீசார் விஜயலட்சுமி, விமல்,சத்ரியன் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்