'கணவனை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த மனைவியால் பரபரப்பு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவனை, மனைவியே சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அகரநல்லூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் அப்பகுதியின் அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார் எனக் கூறப்படுகிறது. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரவி தினமும் மதுஅருந்திவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு தொடர்ந்து ரவி தகராறு செய்து வந்துள்ளார்.
இதேபோல் திங்கள்கிழமையன்று இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இரவு நீண்டநேரமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை முற்றியதாகக் கூறப்படுகிறது. பின்னர் ரவி தூங்கி விட்டார். இந்த நிலையில் கணவர் மீது சித்ரா கடும் ஆத்திரத்தில் இருந்தார். இதனால் தன்னிடம் தொடர்ந்து தகராறு செய்து வரும் கணவரை கொலை செய்து விட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
இன்று அதிகாலையில் வீட்டில் ரவி தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து ரவியின் தலையில் சுத்தியால் சித்ரா ஓங்கி அடித்துள்ளதாகத் தெரிகிறது. கடும் ஆத்திரத்தில் இருந்த அவர் பலமுறை சுத்தியால் தாக்கியதால் ரவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் ரவியை கொலை செய்ய பயன்படுத்திய சுத்தியலுடன், திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சித்ரா சரண் அடைந்தார். அப்போது போலீசாரிடம், தனது கணவரை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கொலை நடந்த இடத்துக்கு போலீசார் சென்று ரவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சித்ராவை கைது செய்தனர். கணவனை, மனைவியே சுத்தியலால் அடித்து கொன்ற சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குழந்தையின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற தாய்..’ தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த கொடூரம்..
- 'மனைவியை தீ வைத்து கொன்ற கணவன்'... 'குழந்தைகள் கண் முன்னே நடந்த பரிதாபம்'!
- ‘வேறு பெண்ணுடன் நடனமாடியதால்’ தகராறு.. ‘கோடரியால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்..’
- 'மகளின் திருமணநிகழ்ச்சியில் உற்சாகமாக பாடிய எஸ்.ஐ.'... 'மேடையிலேயே மயங்கி விழுந்து பலியான சோகம்'!
- 'அறிவுரை கூறிய தாய்க்கு நேர்ந்த கொடூரம்'... 'ஆத்திரத்தில் பட்டதாரி இளைஞர் செய்த விபரீதம்'!
- வீடுபுகுந்து தலையை வெட்டி குப்பையில் வீசிய மர்ம கும்பல்..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- மகனின் காதலுக்கு உதவியதால் நிகழ்ந்த பரிதாபம்.. சரமாரியாக குத்திக் கொலை செய்த பெண்ணின் தந்தை..
- 'சரமாரியாக தாக்கப்பட்ட தலைவர்'... 'அதிர வைத்த வீடியோ!'
- சுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்.. வீடியோவால் ஏற்பட்ட விரோதம்தான் காரணமா..?
- 'நீ எனக்கே இடைஞ்சலா இருக்கியா'?... 'தோசை கரண்டி'யை வைத்து... 'பெற்ற தாய்' செய்த கொடூரம்!