‘திருநங்கையாக மாறிய கணவர்’... ‘ஜீவனாம்சம் கேட்ட மனைவி’... ‘நீதிமன்றம் அளித்த தீர்ப்பு’... சென்னையில் நடந்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருநங்கையாக மாறிய கணவரிடமிருந்து ஜீவானம்சம் கோரி, மனைவி தாக்கல் செய்த மனுவில் சைதாப்பேட்டை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னையை சேர்ந்த மணிமேகலை என்ற பெண், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘எனக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு ராமானுஜம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் எங்களுக்குள் எந்த தாம்பத்திய உறவும் ஏற்படவில்லை. இதனால் மருத்துவரை அணுகினோம். அப்போது, மருத்துவர் சிகிச்சை எடுத்தால் சரியாகிவிடும் என்று தெரிவித்தார். இருந்தும் சரியாகவில்லை. இந்நிலையில் தத்து குழந்தை எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அதற்கு அவரது உறவினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
பின்னர் என்னை துன்புறுத்தி கடந்த 2009-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள். எனவே எனக்கு தங்குவதற்கு ஒரு வீடு, ரூ. 10 லட்சம் பணம், மற்றும் மாதம் சாப்பாட்டிற்கு ரூ. 5 ஆயிரம் ஜீவனாம்சம் ஆகியவற்றை, ராமானுஜம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜாரான ராமானுஜம் தான் திருநங்கையாக மாறிவிட்டதாக தெரிவித்தார். அதற்கு அரசு வழங்கிய ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்டப் பின்னர், ‘இந்த வழக்கில் மனுதாரரின் கணவர் ராமானுஜம் தன்னை ஒரு திருநங்கை என்று ஆதாரங்களுடன் விசித்திரமாக தெரிவித்துள்ளார். அவரே பணம் இல்லாமல், பிச்சை எடுத்து சாப்பிட்டு, அரசு ஆதரவில் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். திருமணம் முடிந்து, கணவன் மனைவி என்ற உறவு முழுமையாக ஏற்பட அவசியமான தாம்பத்திய உறவு பூர்த்திடையவில்லை என்று இருவரும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
எனவே இருவரையும் கணவன், மனைவி என்று தகுதியை அடைந்ததாக கருத இயலாது. மேலும், இந்து திருமணத்தில் கணவன், மனைவிக்கு இறக்கும் வரை ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதை மறுப்பதிற்கில்லை. இருவருக்கும் திருமணமாகிவிட்டது என்பதாலேயே ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட இயலாது’ என்று கூறி உத்தரவிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘என் பொண்டாட்டியும், பொண்ணும் சேர்ந்துதான் என்ன கொளுத்தினாங்க....’ அதிர வைக்கும் மரண வாக்குமூலம்...!
- ‘யாருமே என்ன கண்டுக்கல’.. நள்ளிரவு வீட்டுக்குள் நடந்த பயங்கரம்.. முதியவர் சொன்னதை கேட்டு ‘ஷாக்’ ஆன போலீஸ்..!
- ‘போதையில் மனைவியுடன் தகராறு!’.. ‘அறைக்குள் சென்று பூட்டிக்கொண்ட கணவர்’.. காவலர்களின் சமயோஜிதத்தை ‘நேரில் அழைத்து பாராட்டிய’ காவல் ஆணையர்!
- ‘கல்யாணமாகி 6 மாசம் ஆச்சு’.. ‘இப்போ வந்து இப்டி சொல்றீங்க’.. கணவன் சொன்ன பதிலால் ‘ஷாக்’ ஆன மனைவி..!
- ‘சம்பள பணத்துக்கு ஒழுங்கா கணக்கு காட்டல’.. கோபத்தில் கணவர் செய்த கொடூரம்.. நாமக்கல் அருகே அதிர்ச்சி..!
- ‘ஆறு பிள்ளைகள் இருந்தும்’... ‘கண் கலங்கி நின்ற கணவர்’... ‘கைகோர்த்து துணிச்சல் முடிவு எடுத்தப் பெண்’!
- ‘குவைத்திலிருந்து திரும்பிய கணவர்’... ‘வீட்டுக்கு வரும் முன்னரே’... ‘ஒட்டுமொத்த குடும்பத்திற்கு நடந்தேறிய பயங்கரம்’... 'கதறித் துடிக்கும் மனைவி'!
- “வரதட்சணை கேட்டு துன்புறுத்துறாங்க!”.. ‘பிளிப்கார்ட் இணை நிறுவனர் மீது’ மனைவி பரபரப்பு புகார்!
- நிர்பயா வழக்கு: ‘4-வது முறையாக தூக்குத் தண்டனை தேதி அறிவிப்பு’... டெல்லி நீதிமன்றம் அதிரடி!
- ‘2 ரூபா ஜாஸ்தியா?’.. 3 வருஷமாக நடந்த ‘நெய் பாட்டில் வழக்கு’.. சூப்பர் மார்க்கெட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை!