'தம் அடிச்சா கொளுத்திட்டு செத்துருவேன்... ' 'எதிர்பார்க்கவே இல்ல டக்குன்னு தீ என்னோட...' ஒரே ஒரு சத்தியத்தால் சின்னா பின்னமான குடும்பம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புகைப்பிடிக்க மாட்டேன் என்ற சத்தியத்தை மீறியதால் தீக்குளித்த மனைவி மரணம். மனைவி இறந்ததால் கணவர் செய்த சம்பவம் சென்னை மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்த்தவர்கள் தாமஸ் மற்றும் எஸ்தர். கடந்த 2014-ம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆண்டனி இன்பேன்சியா (5), அர்லின் டோனா (3) என இரு பெண் குழந்தைகளும் மெவின் என 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

அன்பாகவும், அமைதியாகவும் சென்ற இவர்களின் குடும்ப வாழ்க்கை ஒரு சத்தியத்தை மீறியதால் சின்னாபின்னமாகியுள்ளது. எஸ்தர் கடந்த 12-ம் தேதி தீக்குளித்து சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்குபதிவு செய்து தனது விசாரணையை ஆரம்பித்துள்ளார்.

மேலும் தீக்காய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்தரிடம் வாக்குமூலம் சேகரிக்க சென்ற போதுதான் தாமஸுக்கும் எஸ்தருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தெரியவந்துள்ளது.

வாக்குமூலத்தில் எஸ்தர் கூறியதாவது, 'என் கணவர் தாமஸ் சொந்தமாக கார் ஓட்டிவருகிறார். நானும் என் கணவரும் 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டும். எந்த வித வரதட்சணையும் வாங்காமல் தான் என்னை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஒரு போதும் அவர் என்னை குறை சொல்லியது இல்லை. எங்களுக்கு இரு பெண் குழந்தைகளும் 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு  என் கணவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. நான் அது சம்பந்தமாக அவரிடம் கடந்த ஆண்டு சண்டை போட்டதிலிருந்து புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவதாக சத்தியம் செய்தார்.

அதன் பிறகு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் நான் அவரிடம் சண்டை போட்டேன். என்னிடம் கோவித்து கொண்டு வெளியே சென்றுவிட்டார். திரும்ப வீட்டிற்கு வரும் போது பாடம் கற்பிக்கவேண்டும் என நினைத்து, அவர் வீட்டுக்கு வந்த பிறகு, வீட்டில் இருந்த டீசலை எடுத்து என் மேல் ஊற்றிக்கொண்டேன். `இனிமேல் நீ புகைபிடித்தால் நான் இதை ஊற்றி கொளுத்திக் கொண்டு செத்துவிடுவேன்' என்று கூறினேன்.

பதறிய என் கணவர் `நான் இனிமேல் புகைபிடிக்க மாட்டேன்' என்று கூறினார். ஆனால், எதிர்பாராத வகையில் கையில் கொளுத்தி வைத்திருந்த தீ என் நைட்டியில் பட்டுவிட்டது. தீ வேகமாக உடல் முழுவதும் பரவியது.

என் கணவர் தான் என் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து என்னை சேர்த்தார்' என்று கூறியுள்ளார்.

வாக்குமூலம் அளித்த எஸ்தர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியின் வேதனையை பார்க்க முடியாமல் மனவேதனையிலிருந்த தாமஸ், வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்