டிக் டாக் தோழியுடன் 'வீட்டைவிட்டு' ஓடிப்போன கணவர்... ஏகப்பட்ட பெண்களுடன் 'தொடர்பு' வைத்திருக்கிறார்... மனைவி பகீர் புகார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலைக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு சென்ற இளைஞர் டிக் டாக் தோழியை திருமணம் செய்துகொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலைப்புலியூரை சேர்ந்த ராஜசேகர், சுகன்யா என்னும் பெண்ணை 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜசேகர் மது அருந்திவிட்டு தன்னை அடித்து உதைப்பதாகவும், டிக் டாக்கில் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கடந்த ஆண்டு சுகன்யா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு சென்ற ராஜசேகர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கவிநயா என்ற பெண்ணை காணவில்லை என கவிநயாவின் உறவினர்கள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை விசாரித்த அறந்தாங்கி காவல்துறையினர் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில், ராஜசேகருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.
போலீசார் சுகன்யாவிடம் விசாரித்தபோது வேலைக்கு செல்வதாக கூறி சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். காணாமல் போன ராஜசேகர்-கவிநயா இருவரும் டிக் டாக்கில் ஒன்றாக வீடியோ வெளியிட்டு உள்ளனர். இதைப்பார்த்த போலீசார் இருவரும் திருமணம் செய்துகொண்டு டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ள விவரத்தை சுகன்யாவிடம் தெரிவித்து இருக்கின்றனர்.
தன்னுடைய கணவர் ராஜசேகர் பல பெண்களை ஏமாற்றி சீரழித்து வருவதாகவும், அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் போலீசாரிடம் கூறிய சுகன்யா தனக்கும், தன்னுடைய குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும் குடும்பங்களை சீரழிக்கும் டிக் டாக் செயலியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கேங்ஸ்டர் கேர்ள்ஸ்... வாட்ஸ்ஆப் குரூப்...! எங்க 4 பேருக்கு பயம்னா என்னன்னே தெரியாது..." பொடனியில் தட்டி பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்...
- இந்த App-அ install பண்ணும் ‘பெண்களுக்கு’ 10% தள்ளுபடி.. ஹோட்டல் அசத்தல் அறிவிப்பு..!
- 'ஹெல்மெட் போடலையா?'... 'அப்போ இது உங்களுக்குத் தான்!'... 'காவல் துறை கொடுத்த ஷாக்!!'...
- ‘வீடு புகுந்து’ தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் அராஜகம்..! சென்னையில் பரபரப்பு..!
- 'நேத்து ஸ்கூலுக்கு போன பொண்ணுங்க'... 'பெற்றோர் கதறல்!'... 'போலீஸ் அதிரடி'...
- ‘கல்லறையில் சிசிடிவி கேமரா’.. ‘திடீரென காணாமல் போன தாயின் சடலம்’.. வெளியான பகீர் பின்னணி..!
- “களத்தில் இறங்கி அடித்த கலெக்டர்!”.. “தலைமுடியைப் பிடித்து இழுத்து மர்ம நபர் செய்த காரியம்”.. பரவும் வீடியோ!
- ‘ரெண்டு எடத்துல வச்சுருக்கேன்...!’ ‘மிரள’ வைத்த தண்டனைக் கைதி... போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்...!
- ‘வீட்டுக்கு வெளியே விளையாடிட்டு இருந்தா’.. ‘கடைசியா அப்போதான் பாத்தேன்’.. கண்ணீர் மல்க கூறிய தந்தை..!
- 'ஜாதி பேர சொல்லி திட்டுனாங்க'... அதனால... 'திண்டுக்கல்லில் பயங்கரம்!'...