'தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை'... 'சென்னைக்கு மழை இருக்கா'?... வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடைக் காலம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே பல இடங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் வளிமண்டல மேலடுக்கின் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பரப்பில் நிலவும் சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமெனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எண்ட் கார்டே இல்லாமல் நீடிக்கும் பருவமழை?’.. ‘கருணையே இல்லாத மழை எப்போது நிற்கும்?’ - தமிழ்நாடு வெதர் மேன் கூறிய ‘அதி முக்கிய’ தகவல்!
- 'அடுத்த மூன்று மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை'... 'சென்னையின் நிலவரம் என்ன'?... வானிலை மையம் தகவல்!
- 'சென்னையில் வெளுத்து வாங்கிய மழை'... 'தத்தளித்த வாகன ஓட்டிகள்'... 'இன்னும் மழை பெய்ய வாய்ப்பு'?... வானிலை மையம் வெளியிட்ட தகவல்!
- திடீர் மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து.. இன்று திறக்கப்பட உள்ள ‘செம்பரம்பாக்கம்’ ஏரி.. வெளியான அறிவிப்பு..!
- சென்னையில் விட்டு விட்டு பெய்யும் ‘மழை’.. இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கு..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- அடுத்த 24 மணிநேரத்திற்கு ‘4 மாவட்டங்களில்’ கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!
- 'கொட்டி தீர்த்த மீன் மழை...' 'வானத்துல விண்மீன் தானே இருக்கும்...' மீன் மழைலாம் எப்படிங்க பெய்யும்...? -ஆச்சரியப்பட வைக்கும் தகவல்...!
- 'அடுத்த 4 நாட்கள்’... ‘இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்’... ‘மீனவர்களுக்கு எச்சரிக்கை’...!
- 'இந்த இடங்களில் எல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது'... சென்னை வானிலை ஆய்வு மையம்!
- ‘அடுத்த 3 நாட்களுக்கு மழை’.. சென்னைக்கு வாய்ப்பு இருக்கா.? வானிலை மையம் முக்கிய தகவல்..!