'தங்கமணி வீட்டில் ரெய்டு ஏன்'.. என்ன சிக்கியது? இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல்முறை.. செந்தில் பாலாஜி கொடுத்த பதில்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை :  இந்திய அரசியல் வராலாற்றிலேயே முதல்முறையாக, தான் கொள்ளையடித்த பணத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒரு வழக்கை சந்தித்து இருப்பவர் தங்கமணி என   அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising


கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அமைந்துள்ள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பகளை அழகு படுத்தும் விதமாக,கோவை மாநகராட்சி,.'ஸ்ட்ரீட் ஆர்ட்'  என்ற அமைப்புடன் இணைந்து   கட்டடங்களில் அழகிய ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தி வருகிறது. கோவையில் , இந்த அமைப்பின் சார்பில், வரையப்பட்ட ஓவியங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அந்த  குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளின் ஓவியத்திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக,, கோவை மாநகராட்சியுடன் இணைந்து,  உக்கடம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகளுக்கான, ஓவியப்பயிற்சி மற்றும் போட்டி நடைபெற்றது.

இதில் சிறந்த ஓவியம் வரைந்தவர்கள் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சுவர்களில் போஸ்டர் கலாச்சாரத்தை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய ஓவியங்கள் வரையப்படும் எனவும் விரைவில் அதற்கான அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து நேற்றையதினம் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தது தங்களது ஆட்சி போய்விட்டது என்ற விரக்தியில் செய்துள்ளதாக தெரிவித்த அவர் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் சோதனை மேற்கொண்டது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றியுள்ளதாகவும் அதனடிப்படையில் தான் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

முன்னதாக நேற்று அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை என்பது நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர்,ஜெயலலிதா வழியில் வந்த அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.
என்னுடைய வீட்டில் நடந்த சோதனைக்கு தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிதான் காரணம். அவருடைய சுயரூபம் திமுகவுக்கு தெரியவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் போக போக அவரை பற்றி தெரிந்து கொள்வார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி ரெய்டு குறித்து விளக்கமளித்துள்ளார். தேர்தல் வாக்குறுதி அடிப்படையிலேயே சோதனை நடைபெறுவதாக கூறியுள்ளார்.

SENTHIL BALAJI, THANGAMANI, செந்தில் பாலாஜி, தங்கமணி, அதிமுக, ரெய்டு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்