‘காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவில்லை’.. அப்படின்னா மழைக்கு வாய்ப்பு இருக்கா..? வானிலை ஆய்வு மைய இயக்குனர் ‘முக்கிய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக விட்டாலும், தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertising
>
Advertising

தென் வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது சூழ்நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தென் வங்க கடல் பகுதியில் சுமார் 3.1 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது சூழ்நிலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பு இல்லை. இதனால் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். தற்போது காற்று உந்துதல் குறைவாக இருப்பதால் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை. காற்றழுத்தம் உருவாக தாமதமானாலும் காற்றின் சுழற்சியால் மழை விட்டு விட்டு பெய்யும்’ என புவியரசன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்