சென்னையில் ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியதால்தான் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் எல்லாம் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் டி.நகர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முன்பு இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால்தான் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆனால் இப்போது ஒரு நாள் மழைக்கே சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதற்கு காரணம் ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகள், தொழிற்சாலைகள், சாலைகளை கட்டியதுதான் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதில் வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, பல்லாவரம், சிட்லபாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைக்கே வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்த பகுதியில் முன்பு பல ஏரிகள் இருந்துள்ளன. இவற்றை ஆக்கிரமித்து தற்போது பிளாட்டுகள் கட்டுப்பட்டுள்ளன.
இதனால் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ‘ஏரியின் வாழ்வுதனை பிளாட்டு கவ்வும், இறுதியில் ஏரியே வெல்லும்’ என நெட்டிசன் பதிவிட்டது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஹெவி டிராஃபிக்...! 'வண்டி ஒரு இன்ச் நகர்ந்துருந்தா கூட காருக்குள்ள இருந்துருப்பாரு...' 'கடுப்பாகி இளைஞர் செய்த காரியம்...' - ஆஹா... கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ...!
- 'ஆற்றுக்கு அந்த பக்கமும் நிறைய மக்கள் கஷ்ட படுவாங்க இல்ல...' 'ஆற்றைக் கடக்க கொரோனா மருத்துவ பணியாளர்கள் எடுத்த ரிஸ்க்...' - இணையத்தில் 'வைரலாகும்' புகைப்படம்...!
- இந்த தண்ணிய குடிக்குறது ரிஸ்க்...! 'பச்சை கலராக மாறிய கங்கை...' என்ன காரணம்...? 'இந்த கலர்ல மாறுறது ரொம்ப ஆபத்து...' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்...!
- 'அப்பா...! உன்ன ராஜா மாதிரி வச்சுப்பேன்...' 'ஆட்டை காப்பாத்த...' 'ஆற்றில் குதித்த இளைஞர்...' 'திடிர்னு வந்த சுழல்...' - கண்ணீரில் மிதக்கும் குடும்பம்...!
- 'ஆற்றில் மிதந்த ஆண், பெண் சடலங்கள்...' 'இருவர் கைகளையும் துப்பட்டாவில் கட்டி...' - அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்...!
- என் 'புள்ளைங்கள' நானே கொன்னுட்டேனே... கண்முன்னே இறந்த 'மகன்களை' பார்த்து கதறியழுத தந்தை... நெஞ்சை 'ரணமாக்கும்' சோகம்!
- 'சிவப்பாக மாறிய தாமிரபரணி...' 'இதனால' தான் கலர் மாறியிருக்கு...! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்...!
- 'பாத்ரூம் போணும், பைக்க நிறுத்துங்கன்னு சொன்ன மனைவி'... 'திரும்பி பார்த்தபோது கணவன் கண்ட காட்சி'... ஒரு நொடியில் நடந்த சோகம்!
- 'மருத்தவமனையில்' அனுமதிக்கப்பட்ட 'மகளைப் பார்க்க...' 'தந்தை செய்த துணிகர காரியம்...' '2 நாட்கள்' கழித்து பிணமாக மீட்கப்பட்ட 'சோகம்...'
- 'சுத்தமாயிடுச்சுனு சொல்லாதீங்க.. இங்க வந்து பாருங்க!'.. கங்கை நதியை ஆராய்ந்த அதிகாரிகள்... இந்தியாவையே கொண்டாட்டத்தில் திளைத்த சம்பவம்!.. என்ன நடந்தது தெரியுமா?