யார்.. யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? தமிழக அரசு புதிய உத்தரவு.. முழு விவரம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: யார்.. யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? என்பது குறித்து தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.  நகைக்கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.   40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் தள்ளுபடி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்துள்ளவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி  வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அண்மையில் அரசாணை நிறைவேற்றப்பட்டது.  அதன்படி தகுதி வாய்ந்த பயளாளிகள் தேர்வு குறித்து சில வரைமுறைகள் வெளியிடப்பட்டன- இந்நிலையில்  மீண்டும் புதிய வரைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

நகைக்கடன் தள்ளுபடி

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பொது நகைக்கடன் மற்றும் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்வது, அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் இ.ஆ.ப., நேற்று (28/12/2021) கூடுதல் பதிவாளர் சென்னை மண்டலம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

சேலம் 

பொது நகைக்கடன்களை கள ஆய்வு செய்வதற்கு அயல் மாவட்டங்களில் உள்ள அலுவலர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு, சேலம் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, தகவல் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நிதி இழப்பு

இந்நிலையில், இந்தப் பணி முடிவடைவதற்கு மேலும் காலதாமதமாகும் என்பதைக் கருத்தில் கொண்டும், இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையின்றி நிதி இழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டும் 28/12/2021 அன்று நடைபெற்ற கூகுள் காணொளி காட்சியில் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

நகைக்கடன் விவரங்கள்

ஏற்கனவே, மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட 48,84,726 நகைக்கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என்று முடிவு செய்யப்பட்டு, அந்த பட்டியல்கள் அனைத்தும் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு எக்செல் படிவத்தில் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டிருந்தன.


நகைக்கடன் தள்ளுபடி நிபந்தனைகள்

* ஏற்கனவே, 2021- ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின் படி இடம் பெற்றுள்ள அவர்தம் குடும்பத்தினர்,

* நகைக்கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள்,

* 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்ற குடும்பத்தினர்,

* 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்ற நபர்,

* கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,

* கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,

* அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,

* குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்,

* ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்,

* எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினர்,

ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கும் கூடுதலாக பெற்ற AAY குடும்ப அட்டைத்தாரர்கள்,

மாவட்ட பட்டியல்

அரசாணையில் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தள்ளுபடிக்கு தகுதிப்பெறும் நகைக்கடன்தாரர்களின் மாவட்ட வாரியான பட்டியலும் அந்தந்த மண்டல இணைப்பதிவாளர்களுக்கு எக்செல் படிவத்தில் இ-மெயில் மூலம் இக்கடிதத்துடன் அனுப்பப்பட்டுள்ளது." இவ்வாறு  அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

JEWELRY LOAN WAIVER, JEWELRY LOAN, நகைக்கடன் தள்ளுபடி, நகைக்கடன், ஸ்டாலின், தமிழக அரசு, கூட்டுறவு வங்கி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்