'30-ந் தேதி' வரை 'மதுக்கடைகள்' திறக்கப்படாது 'பொதுமக்கள்' நலனே எங்களுக்கு 'முக்கியம்'... 'அமைச்சர் தங்கமணி தகவல்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மதுக்கடைகள் திறக்கப்படாது என அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாமக்கல் மாவட்டத்தில் 45 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்ட அவர், அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே நேரில் சென்று விநியோகிக்கும் வகையில், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.
தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பதால் தமிழகத்தில் 6 ஆயிரம் மெகாவாட் வரை மின்பயன்பாடு குறைந்து உள்ளதாக அமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வருகிற 30-ந் தேதி வரை திறக்கப்படாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், பொதுமக்கள் நலனே எங்களுக்கு முக்கியம் எனக் குறிப்பிட்டார். .
முன்னதாக குமாரபாளையத்தில் பேட்டி அளித்த அவர், ‘கடந்த மாத மின்கட்டணத்தையே பொதுமக்கள் ஆன்லைனில் செலுத்தலாம். அவ்வாறு கட்ட தவறினாலும் மின்இணைப்பு துண்டிக்கப்படாது எனத் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அந்த முடிவு எடுக்குற ‘அதிகாரம்’ எனக்கு மட்டும்தான் இருக்கு.. அதிபர் ‘டிரம்ப்’ அதிரடி..!
- உலகமே ஊரடங்கில் இருக்கும்போது... 'ஜனநாயகத் திருவிழா'வை கொண்டாடும் தென் கொரியா மக்கள்!... உலக நாடுகளை அதிரவைத்த சம்பவம்!
- 'ஒரே நாளில் கிடைச்ச மரண அடி'...'வல்லரசு நாடுன்னு மட்டும் சொல்லாதீங்க'...நிலைகுலைந்த அமெரிக்க மக்கள்!
- ‘இந்த மாதிரி நேரத்துல நாமதான் அதுங்கள பாத்துக்கணும்’.. கோவை போலீஸுக்கு குவியும் பாராட்டு..!
- 'உலக சுகாதார அமைப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ட்ரம்ப்!'... அமெரிக்க நலனா? சீன எதிர்ப்பா?... அடுத்தது என்ன?
- ‘இப்டியொரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது’!.. கேட்பாரற்று கிடக்கும் ‘சடலங்கள்’.. நெஞ்சை ரணமாக்கிய போட்டோ..!
- காலை முதல்வர் தலைமையில் நடந்த மீட்டிங்கில் பங்கேற்ற எம்எல்ஏ-க்கு மாலை கொரோனா தொற்று.. அதிர்ச்சியில் மாநில அரசு..!
- போன மாசம் '1 லட்சம்' பேருக்கு... வேலை வழங்கிய 'பிரபல' நிறுவனம்... இந்த மாசம் 'எவ்ளோ' பேருக்குன்னு பாருங்க?
- 'அமெரிக்காவில்' மீண்டும் தொடங்கியது 'WWE'... 'ரணகளத்துலயும்' பொழுதுபோக்குக்கு 'முக்கியத்துவம்'... 'முடங்கிக்' கிடக்கும் மக்களுக்கு 'இது தேவை'...
- 'இந்த' தேதிக்குப்பின் ஊரடங்கில்... சில 'கட்டுப்பாடுகள்' தளர்த்தப்பட வாய்ப்பு: பிரதமர் மோடி