'தமிழகத்தில்' கொரோனா வைரஸின் நிலை என்ன?... 'இன்றைய நிலவரம்’... ‘அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், “தமிழகத்தில் இதுவரை 2,09,163 பேருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 15,298 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
தனிமைப்படுத்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் 9,154 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது கொரோனா அறிகுறிகள் இருப்பதாகக் கருதி 116 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 743 ரத்த மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் 608 மாதிரிகளில், கொரோனா இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன.
15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 120 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா இருந்த ஒருவர், குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்,” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் நேற்று வரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மாநில அரசு உறுதி செய்திருந்த நிலையில், இன்று சென்னை போரூர், கீழ்கட்டளை, புரசைவாக்கத்தை சேர்ந்த மூவருக்கு புதிதாக கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சென்னையில்’ மேலும் ‘3 பேருக்கு’ கொரோனா... ‘பாதிக்கப்பட்டவர்கள்’ எந்தெந்த ‘பகுதிகளை’ சேர்ந்தவர்கள் என ‘அமைச்சர்’ தகவல்...
- 'தமிழ்நாட்டுல இத மட்டும் நடக்க விட மாட்டோம்'...'உணர்ச்சி பொங்க பேசிய முதல்வர்'... வைரலாகும் வீடியோ!
- 'துபாயிலிருந்து வந்தாரு'...'ஒரே காய்ச்சல்'...'ரொம்ப ட்ரை பண்ணியும் காப்பாற்ற முடியல'...அதிகரித்த பலி!
- சீனாவை ‘மிஞ்சிய’ பாதிப்பு... ‘மருத்துவ’ துறையில் இல்லையென்றாலும்... ‘பிரபல’ விளையாட்டு வீரர் செய்த ‘நெகிழ்ச்சி’ காரியத்தால்... ‘குவியும்’ பாராட்டுகள்...
- 'எங்களுக்கு அவன் ஒரே புள்ள'... 'பரிதாபமாக சிக்கி கொண்ட பி.டெக் மாணவன்'... பரிதவிப்பில் பெற்றோர்!
- “தமிழகத்தில் கொரோனா சமூக நோய்த்தொற்று மின்னல் வேகத்தில் பரவுகிறது” - அமைச்சர் விஜயபாஸ்கர்!
- VIDEO: கொரோனா ஒழிப்பில்... 'உலகத்துக்கே இந்தியா தான் வழிகாட்டி!'... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை!... என்ன காரணம்?
- குடும்ப அட்டைதாரர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டட மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ‘நிவாரணம்’... முதலமைச்சர் ‘அறிவிப்பு’... விவரங்கள் உள்ளே...
- 'இப்போ தான் நிம்மதியா வீட்டுக்கு போனோம்'...'மீண்டும் பூதாகரமாக வெடித்த காய்ச்சல்'...78 பேர் பாதிப்பு!
- '4 நாட்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!!'... 'வைரஸ் தீவிரமடையுது... அத ஒழிக்க ஒரே வழி தான் இருக்கு!'... உலக சுகாதார அமைப்பு காட்டம்!