3 மணிநேரம் நகராமல் இருந்த ‘நிவர் புயல்’.. என்ன காரணம்..? வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயல் கடந்த 3 மணி நேரமாக நகராமல் இருப்பதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையிலிருந்து 450 கிலோமீட்டர், புதுச்சேரியிலிருந்து 410 கிலோமீட்டர் தொலைவில் கடந்த 3 மணி நேரமாக நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் அதன் நகரும் வேகம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், ‘இன்று காலைதான் நிவர் புயலாக மாறியுள்ளது. அதற்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை பொருத்தவரை, நேற்று காலை 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அதன்பின்னர் நேற்று பிற்பகல் 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. தற்போது நிலையாக இருக்கிறது.
முதலில் கீழே இருந்தது. தற்போது மேலே நகர்ந்து வருவதால் இலங்கை பகுதியுடன் தொடர்பில் உள்ளது. வேறு ஒரு இடத்தில் தொடர்பில் இருக்கும்போதும், புயலின் நிலையில் மாற்றம் நிகழும் போதும், நகர்வில் மாற்றம் இருக்காது. இது இயல்பான ஒன்றுதான். புயல் ஒரே வேகத்தில் நகராது. ஏற்ற இறக்கங்கள் இருக்கக் கூடும். முதலில் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இப்போது நிலையாக உள்ளது. அதன்பின் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பின்னர் மீண்டும் வேகமாக நகரக்கூடும்’ என அவர் விளக்கமளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நிவர் புயல் எதிரொலி’... ‘அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு’... ‘ தமிழக அரசு நடவடிக்கை’...!!!
- ‘தொடர் கனமழை’!.. செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன..? அதிகாரிகள் ‘முக்கிய’ தகவல்..!
- கடலூர்: ‘278 ஆபத்தான இடங்கள்’.. ‘180 ஜெனரேட்டர்கள்’.. Nivar புயலை எதிர்கொள்ள ‘முழுவீச்சில் தயாரான மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படை!’
- ‘நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை’... ‘இந்த ரயில்கள் மட்டும் ரத்து’... ‘7 மாவட்டங்களில் நாளை மதியம் முதல் பேருந்து நிறுத்தம்’... ‘புயல் கடக்கும்போது மட்டும் மின் துண்டிப்பு’...!!!
- தீவிர புயலாக கரையை கடக்கும் 'நிவர்' புயல்!.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 'இதெல்லாம்' செய்யணும்!.. பொதுமக்கள் அலர்ட்!
- '4 வருஷத்துக்கு' அப்புறம் சென்னை, கடலோர மாவட்டங்களை குறிவைக்கும் ‘அடுத்த புயல்’ நிவார்!.. முன்பே ‘விடுக்கப்பட்டுள்ள’ அபாய எச்சரிக்கை!