Video: “சொல்றவங்க.. சித்ரா இறந்த அன்னைக்கே சொல்லிருக்கலாம்ல?.. ஆனா அன்னைக்கு இரண்டு குடும்பத்துக்கும் நடந்தது இதுதான்!” - ஹேமந்த் தரப்பு வக்கீல் ‘பரபரப்பு’ பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சித்ராவின் வழக்கு குறித்த பல்வேறு தகவல்களை முன்வைத்ததுடன், பல கேள்விகளையும் எழுப்பியுள்ளார் ஹேமந்தின் வழக்கறிஞர்கள் விஜயகுமார் மற்றும் தேவேந்திரன் இருவரும் பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியின் சுருக்கத்தை காணலாம்.
அந்த பேட்டியில், “சித்ராவும் ஹேமந்தும் ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள். இந்த தகவலை சித்ராவின் வீட்டிற்கு சென்று சித்ராவின் தாயாரிடம் முதலில் கூறியுள்ளனர். அதன் பிறகுதான் வீட்டிற்கு இந்த தகவல் தெரிய வந்தது. அதன் பிறகு இருவரும் ஒரே சாதிப் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரண்டு குடும்பத்தினருக்கும் ஒத்துப் போகவே நிச்சயதார்த்தத்தை பெரிய அளவில் நடத்த வேண்டும் என்று எண்ணி திருவேற்காட்டில் 35 சவரன் நகையை நகைகளுடன் நிச்சயதார்த்தத்தை இரண்டு குடும்பத்தினரும் விமர்சையாகவே நடத்தியிருக்கின்றனர்.
அந்த நேரத்தில்தான் மொத்த திருமணத்துக்கும் தன்னிடம் 5 லட்சம் ரூபாய் தான் பணம் இருப்பதாக சித்ராவின் தாயார் சித்ராவிடம் கூறவே சித்ராவுக்கு ஏற்பட்டது சிக்கல். ஆனால் திருமண செலவை ஏற்பதாக ஹேமந்த்தின் தந்தை கூறியதை அடுத்து மனம் உருகிப் போன சித்ரா தன்னுடைய தாய் தந்தையருக்கு அண்மையில்தான் 60வது கல்யாணத்தை மிக விமர்சையாக கொண்டாடியதாகவும், ஆனால் தன்னுடைய திருமணத்தை அவர்கள் அப்படி செய்து வைக்க முடியாத சூழலில் இருப்பதாக சித்ராவின் தாயார் கூறியதையடுத்து சித்ராவின் வருங்கால மாமனாருக்கு நன்றி சொல்லியிருக்கிறார்.
‘உங்கள் மருமகளாக வந்து வாழ்வதற்கு முன்பே எங்களுடைய திருமண செலவை நீங்கள் ஏற்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’ என்று சித்ரா கூறியிருக்கிறார். சித்ராவின் மரணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சித்ரா ஹேமந்த்தின் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து இருந்து ஒன்றாக சமைத்து உண்டு அதன் பிறகு சென்றுள்ளார். இரண்டு நாள் கழித்து சித்ராவின் மரண செய்தியை கேள்விப்பட்ட ஹேமந்த்தின் தந்தை சித்ராவின் தாயாருக்கு போனில் அழைத்து இது பற்றி விசாரித்திருக்கிறார்.
பேசுபவர்களாக இருந்தால் சித்ராவின் தரப்பிலிருந்து, சித்ராவின் பெற்றோர், சித்ரா இறந்த அன்றே ஹேமந்த் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டு வைத்து பேசியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அன்று அவர்கள் எதுவுமே பேசவில்லை. மிக சகஜமாகவே ஹேமந்த் குடும்பத்தினருடன் அவர்களும் சேர்ந்து துக்கத்தை அனுசரித்து இருந்தார்கள். ஆனால் ஆர்டிஓ இந்த வழக்கை கையில் எடுத்து 6 நாட்கள் திட்டமிட்டு, விசாரித்துக் கொண்டிருந்தபோது ஐந்தாம் நாள் இரவே அவசரஅவசரமாக நசரத்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் ஏன் ஹேமந்த்தை கைது செய்தார்கள்? யாரை காப்பாற்றுவதற்காக அவர்கள் இதைச் செய்தார்கள்? ஆர்டிஓ இன்னும் ஒருநாள், அதாவது 6-ஆம் நாள், ஹேமந்த்தை நேரில் அழைத்து விசாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில் ஐந்தாம் நாள் இரவே ஹேமந்த் கைது செய்யப்பட்டதற்கான பின்னணி என்ன? என்பதுதான் எங்களுடைய சந்தேகமாக இருக்கிறது. இதனால் விசாரணையை விரிவுபடுத்த நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.
முதுகலை உளவியல் படித்த சித்ரா மிகவும் துணிச்சலானவர் என்றும், எந்த ஆம்பளையாக இருந்தாலும் எந்த இடத்திலும் அவரை எதிர்த்துப் பேசும் துணிவு இருக்கு கூடியவர் என்றும் சொல்லப்படும் பொழுது அவரை துன்புறுத்தினாலோ, அடக்கியாள நினைத்தாலோ, தூக்கிப் போட்டுவிட்டு செல்ல அவருக்கு எவ்வளவு நேரம் ஆகும்? எனவே இன்னும் இது விஷயமாக ஒளிந்திருக்கும் பல உண்மைகள் விசாரணை மூலமாக வெளிவரட்டும். அதையே நாங்கள் முடுக்கிவிட நினைக்கிறோம். போலீசுக்கே தேரியாத நிறைய தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் நடிகை ரேகா நாயரை அரசு தரப்பு அழைத்து விசாரித்தால் அவர் இன்னும் நிறைய தகவல்களை சொல்லுவார் என தெரிகிறது. அவரை ஏன் அழைத்து விசாரிக்க கூடாது?” என ஹேமந்தின் வழக்கறிஞர்கள் விஜயகுமார் மற்றும் தேவேந்திரன் இருவரும் பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் பேசியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘VJ சித்ரா’ மரணத்துக்கு காரணம் ‘வரதட்சணை கொடுமையா?’.. ஒருவழியாக முடிந்த RDO விசாரணை.. அவிழுமா மர்ம முடிச்சுகள்? தயாரான 250 பக்க ‘பரபரப்பு’ அறிக்கை!
- 'குடும்பத்துக்காக உழைத்த சித்ரா'!.. ஆனா... "கல்யாண செலவுக்கு கூட"... கொடுமையிலும் கொடுமை!.. திடுக்கிடும் தகவல்!
- ‘12.57 லட்ச ரூபாய்க்கு நகை’.. ‘மண்டபத்துக்கு அட்வான்ஸ்!’.. ‘சித்ரா இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் நடந்தது என்ன?’.. - வெளியான ‘வைரல்’ சிசிடிவி காட்சிகள்!.. வீடியோ!
- 'மது பழக்கம் இருந்துச்சு'.. 'சில நம்பர்ல இருந்து போன் வந்தா மட்டும் சித்ரா பதட்டமாகி..' - ஹேமந்த்தின் தந்தை அளித்த பரபரப்பு புகார்!
- 'பலத்த போலீஸ் பாதுகாப்பு... 8 மணி நேரம் சரமாரி கேள்விகள்'!.. 'ஹேம்நாத் மட்டும் தான் காரணமா'?.. உண்மைகளை உடைக்கப் போகும் ஆர்டிஓ விசாரணை!
- Video: "உங்கள மாதிரியா இருக்கேன்னு சித்ராவிடமே கேட்டேன்!".. சித்ரா கேரக்டருக்கு மாற்றாக நடிக்கிறாரா கீர்த்தனா? யார் இவர்? Exclusive Interview!
- 'மனைவி சித்ராவை டார்ச்சர் செய்ததாக கைது செய்யப்பட்ட ஹேம்நாத்!'... சிறைக்கு சென்று நேரில் சந்தித்த தந்தை செய்தது என்ன?
- 'சித்ராவின் முடிவுக்கு இதுதான் காரணமா'?... 'என்ன பதில் சொல்ல போறீங்க ஹேம்நாத்'... 'ஆர்.டி.ஓ வரிசையா அடுக்கிய கேள்விகள்'... என்ன சொன்னார் ஹேம்நாத்?
- 'சித்ராவின் வாயாலையே சொல்ல வைத்த ஹேம்நாத்'... 'அந்த பொண்ணு இவ்வளவு டார்ச்சர் அனுபவிச்சு இருக்கா?'... போலீசார் மீட்டெடுத்த ஆடியோவில் தெரிய வந்த அதிர்ச்சி!
- சித்ரா செல்போனை மீட்டெடுத்த காவல்துறை!.. சிக்கியது ஆடியோ ஆதாரம்!.. ஹேம்நாத்திடம் உண்மையை வரவழைக்க... 'இது' தான் ப்ளான்!