‘அச்சுறுத்தும் ஒமைக்ரான்’!.. தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு இருந்த ‘அறிகுறி’ என்ன..? சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் இருந்தது என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் தமிழகத்தில் 57 பேருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. இவர்களது மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 33 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற 24 பேர்களின் முடிவுகள் விரைவில் வரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 33 பேர்களில் 2 பேர் 18 வயதுக்கும் கீழானவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் இருவரை தவிர மற்ற அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான தலைவலி, தலைச்சுற்றல், தொண்டை அடைப்பு ஆகியவை அறிகுறிகளாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

OMICRON SYMPTOMS, OMICRON, MASUBRAMANIAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்