"அதிர்ஷ்டமே மீன் வலைக்குள்ள வந்து சிக்கி இருக்கு".. மொத்தம் 35 கிலோ.. "மதிப்பே 35 கோடிக்கு மேல போகுமாம்"

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மீன் பிடிக்க போன மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் தங்கம் தொடர்பான செய்தி, தற்போது பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அமெரிக்காவை புரட்டிப்போட்ட புயல்.. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட நாசா.. யம்மாடி என்ன இப்படி இருக்கு..!

கடப்பாக்கம் அருகேயுள்ள கடப்பாக்கம்குப்பம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் இந்திரகுமார். இவர் மாயகிருஷ்ணன் மற்றும் கர்ணன் ஆகியோருடன் கடந்த சில தினங்களுக்கு முன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, மீனுக்காக இந்திரகுமார் மற்றும் உடனிருந்தோர் போட்டிருந்த வலையில் அரிய பொருள் ஒன்று சிக்கி உள்ளது.

சுமார் 35.6 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் கழிவு இருந்துள்ளது. திமிங்கலத்தின் கழிவில் என்ன இருக்கிறது என பலரும் யோசிக்கலாம். ஆனால், Ambergris எனப்படும் திமிங்கலத்தின் வாந்தி கழிவு, பல கோடி விலை மதிப்புள்ளதாகும். வாசனை திரவியங்கள் உருவாக்கவும், வேறு மருந்து தயாரிக்கவும் என பல விஷயங்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, இதன் விலையும் பல கோடி ரூபாய் வரை மதிப்புள்ளதாகும். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு, ஒரு கிலோவுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி பார்க்கையில், மீனவர்கள் வலையில் சிக்கிய இந்த மீனின் உமிழ் நீருக்கு சுமார் 35 கோடி ரூபாய்க்கு மேல் வரை மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கரைக்கு திரும்பிய இந்திரகுமார் மற்றும் சக மீனவர்கள், இந்த திமிங்கல உமிழ் நீரை வனத்துறை அதிகாரிகளிடம் நேர்மையாக ஒப்படைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது வலையிலும் 3 கிலோ எடையில் திமிங்கல உமிழ் நீர் சிக்கியதாக கூறப்படுகிறது. அதுவும், வனத்துறை அதிகாரிகள் கையில் ஒப்படைக்கப்பட்டது.

கடல் தங்கம் என்றும் இதற்கு பெயருள்ள நிலையில், தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில், ஆம்பர்க்ரீஸ் என்ற திமிங்கல வாந்தி கிடைத்து மீனவர்களின் வாழ்க்கையையே தலை கீழாக மாற்றிய சம்பவங்களும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | உலக பணக்காரர்கள் பட்டியல்.. திடீர் பின்னடைவை சந்தித்த தொழிலதிபர் அதானி.. முழுவிபரம்..!

WHALE, WHALE AMBERGRIS, FISHERMAN NET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்