தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் மற்றும தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதுமட்டுமல்லாது தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மெகா மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘ஸ்ரீஹரிகோட்டாவில் மேகங்கள் ஒன்றிணைவதை பார்க்க முடிகிறது. தற்போது மழை பெய்து வருகிறது மகிழ்ச்சி. இந்த மழை நாளையும் தொடரலாம். மேகங்கள் மழையை உண்டாக்கும் சூழலை பார்க்க முடிகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முக்கிய பொறுப்பில் தமிழக திருநங்கை'... 'உணவு நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்'!
- '1 கோடி லிட்டருப்பு'.. இனியாச்சும் தீருமா? சென்னையின் தண்ணீர் தேவை? தொடங்கிய குடிநீர் ரயில் சேவை!
- 'திரும்பவும் அவ அப்டி கேட்டா?'... 'அதான் கொன்னேன்'... ‘காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்’!
- 'ஒரு நொடியில் நடந்த விபரீதம்'.. ‘டிராஃபிக் சப்-இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த பரிதாப கதி’... வீடியோ!
- 'வேலை வாங்கித் தருவதாகக் கூறி'... '15 வயது சிறுமியை 5 பேர் சேர்ந்து'... 'சென்னையில் நடந்த கொடூரம்'!
- ‘மழையால் இந்தியாவுக்கு வந்த சோதனை’.. ஆனா இதுமட்டும் நடந்தா இந்தியா பைனல் போக வாய்ப்பு இருக்கு..! நடக்குமா..?
- 'என்னதான் போதையில் இருந்தாலும்'..'இப்படியா கேக்குறது?'.. தலைகீழாகக் கவிழ்ந்த கார்.. டிரைவரின் விநோத பேச்சு!
- ‘பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளை’.. சென்னையை அதிரவைத்த ஷேர் ஆட்டோ டிரைவர்..!
- 'திருடங்கிட்டயே திருட்டா?'.. சென்னை பெண் போலீஸ் செய்த காரியம்.. சிக்கிய சிசிடிவி!
- 'நீ யார்யா.. நடுவுல'... 'முடியாது.. எவன் வேணாலும் வரட்டும்'.. 'அடிப்பீங்களா?'.. பரபரப்பு சம்பவம்.. வீடியோ!