நீங்க காயப்போட 'துணிய' எடுங்க...! நீங்க காய் வாங்க 'குடைய' எடுங்க...! - வெதர்மேன் செம்ம போஸ்ட்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக சென்ற வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிக அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகிய நிலையில் எதிர்பாராத வகையில் அதிகளவில் மழை பொழிவும் ஏற்பட்டது

இந்நிலையில்தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து எழுதிய பதிவில் இரு புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மற்றும் அதனை சுற்றி 100 கி.மீ. தொலைவுப்பகுதியில் இருக்கும் மக்கள் துணிகளை துவைத்து கொள்ளலாம் என சுட்டிக்காட்டும் வகையில் இருந்தது.

இன்னொரு புகைப்படத்தில் தென் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவிருப்பதை குறிப்பிடும் வகையில் விளக்கும் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனால் தென் தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் கேரளத்தின் திருவனந்தபுரம், கொல்லம், இதர தெற்கு கேரள பகுதிகளில் இன்று மழை தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதோடு இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 'தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இது, மேற்கு-வட மேற்கு திசையில் நகா்ந்து, இலங்கை-தென்தமிழகம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இலங்கை - தென் தமிழகத்தை நோக்கி நகரும் வாய்ப்பிருப்பதாகவும் தமிழகத்தில் நவம்பர் 25, 26, 27 ஆகிய நாள்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

WEATHERMAN, CHENNAI, WASH, CLOTHES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்