‘இன்னும் இரண்டு நாள் மட்டும் கொஞ்சம் பாத்து இருங்க..’ செய்தி வெளியிட்டுள்ள வானிலை மையம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதியுடன் கத்தரி வெயில் முடிவடைந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமல் தொடர்கிறது.
தினந்தோறும் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்றால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் வானிலை மையம் ஆறுதலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் வரும் 21ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை மையம் கூறியிருந்தது. பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியிருந்தது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வடக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 3-4 நாட்களுக்கு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் வெயிலின் தாக்கம் ஓரளவுக்குக் குறையும். குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கம் குறையும். 21ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கும். தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததும் படிப்படியாக வெப்பம் குறையும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இதுனால உலகக்கோப்பைல எதுவேணும் நாலும் மாறலாம்’.. வீரர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது எது தெரியுமா?
- 'அக்னி வெயில் குறையுமா'?... வானிலை மையம் புதிய அறிவிப்பு!
- வெளுத்து வாங்கும் கோடை மழை... தலைநகர் சென்னையில் எப்போது மழை!
- 450 கி.மீ தொலைவில் ஃபானி புயல் : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும் 10 லட்சம் மக்கள்!
- சூறைக்காற்றுடன் கூடிய கனமழை.. உயிரிழந்த வெளிநாட்டுப் பறவைகள்.. நெல்லையில் சோகம்!
- கன்னியாகுமரியில் கடல் சீற்றம்.. ஊருக்குள் புகுந்த கடல்நீர்.. மீனவ கிராம மக்கள் அச்சம்!
- 'தமிழகத்தை நோக்கி வரும் ஃபானி புயல்.. ' 2 நாட்கள் ரெட் அலர்ட்'?
- ‘ஏன் சென்னையில மட்டும் 12:07-க்கு நிழல் விழல?’.. ஏப்ரல் 24-ஆம் தேதியின் அறிவியல் அதிசயம் என்ன?
- 'நம்ம சென்னையா இது'?...'சென்னை கிளைமேட் இஸ்'...'ரொமான்டிக்னு' ஸ்டோரி போடுவாங்களே!
- ‘இந்த ஏரியா மக்கள் காலையிலே போய் ஓட்டு போடுங்க.. கனமழை இருக்கு’..வெதர்மேன் அலெர்ட்!