'சுடிதார் பேண்டின் கயிறை கூட கட்ட தெரியாது'...'ஆனா தூக்கு கயிறு நெரிக்கும் போது'...தாய் கண்ணீர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஐஐடி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ள நிலையில், தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் எனது மகளை இங்கு படிக்க அனுப்பினோம் என மாணவி பாத்திமா லத்தீப்பின் தாய் உருக்கத்துடன் கூறியுள்ளார்.
ஐஐடி சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தற்கொலைக்கு சில பேராசிரியர்கள் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் மாணவியின் தாய், தமிழகத்தை நம்பி தான் எனது மகளை அனுப்பியதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், '' பாத்திமாவை படிப்பிற்காக வெளியூருக்கு அனுப்புவதற்கே பயமாக இருந்தது. அதோடு அவளை முக்காடு அணிவதற்கு கூட வேண்டாம் என்றே சொல்லி விட்டோம். காரணம் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவளுக்கு தொல்லைகள் ஏற்படுமோ என்ற காரணம் தான் முதன்மையாக இருந்தது. இதன்காரணமாக மற்ற பிள்ளைகள் போன்று சாதாரண ஆடையினை அணிய சொன்னோம்.
இதற்கிடையே பாத்திமாவுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. ஆனால் பாத்திமாவோ நான் விமானத்தில் தானே செல்ல போகிறேன், அதனால் கவலை வேண்டாம் என கூறினாள். இருந்தபோதும் மகளை அங்கு அனுப்பவில்லை. இந்த சூழ்நிலையில் தான் பாத்திமாவுக்கு சென்னை ஐஐடியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும், என்ற நம்பிக்கையில் தான் எனது மகளை அனுப்பினோம். ஆனால் எங்களுது நம்பிக்கை எல்லாம் தலைகீழாக மாறி போய்விட்டது.
ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்து போயிருக்கிறாள். படிப்பில் எனது மகள் நல்ல ஆர்வத்தோடு தான் இருந்தாள். அது எனது மகளுடன் படித்த அனைவருக்கும் தெரியும். பாத்திமாவுக்கு தெரிந்தது எல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும் தான். அவள் வேறு எங்கும் சென்றது இல்லை.
சுடிதார் பேண்டின் கயிறினை கூட எனது மகளுக்கு கட்ட தெரியாது. அது அவளுக்கு இறுக்கி வலியை உண்டாக்கும் என கூறுவாள். ஆனால் அவளது கழுத்தை தூக்கு கயிறு எப்படி நெரித்து, அதனை பாத்திமா எப்படி தாங்கி கொண்டாள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நாங்கள் நிச்சயம் எனது மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இனியொரு பாத்திமாவை யாரும் இழக்க கூடாது என வேதனை பொங்க தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் நீடிக்கும் மர்மம்’.. ‘புதிதாக வெளிவந்துள்ள செல்ஃபோன் பதிவு’..
- நாலு பேர் முன்னாடி 'இப்டி' செஞ்சிட்டாங்களே.. 'காதலி'யின் குடும்பத்தினரால்.. இளைஞர் தற்கொலை!
- ‘திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் இளம் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்’..
- 'மிஸ்டு காலில் ஆரம்பித்த ரொமான்ஸ்'...'காதலியை நேரில் சந்தித்தபோது காத்திருந்த அதிர்ச்சி'!
- 'கை இல்லனா என்ன தம்பி'...'நெகிழ வைத்த முதலமைச்சர்'...சல்யூட் போடவைத்த முதல்வரின் செல்ஃபி!
- 'ஆறுதல் சொல்லியும் கேக்கல'...'கல்யாணமாகி 6 மாசம் தான் ஆச்சு'... 'என்ஜினீயர்' எடுத்த விபரீத முடிவு'!
- 'வியாபாரத்தில் நஷ்டம்'.. தொழிலதிபரின் குடும்பமே எடுத்த முடிவு.. 'தமிழகத்தை உலுக்கிய சோகம்'!
- ‘முதலில் கணவர், அடுத்து 2 வயது குழந்தை’.. ‘காதலருடன் தப்பிய மனைவி செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- 'மேக்-அப் ரூம்க்கு போன என்ஜினியர் மாப்பிள்ளை'.. 'திருமணத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக'.. நடந்த சோகம்!
- ‘சென்னை ஐஐடி மாணவி எடுத்த விபரீத முடிவு’.. ‘விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..