'இங்க ஏற்கனவே சுத்தமா இல்ல! அதுல இதுவேறயா'?.. அதிர வைக்கும் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி முதல் 15 ஆயிரம் தனியார் தண்ணீர் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பிருந்தே கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது கத்திரி வெயில் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள் வறண்டு கொண்டே ஆகையால் தண்ணீர் தேவை என்பது வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கின்றது.
இந்நிலையில், சென்னை கோவிலம்பாக்கத்தில் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர கூட்டம் நடைபெற்றது. திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் எடுக்க தடைவிதித்து, அதிகாரிகள் மோட்டார்களை சேதப்படுத்துவதாக லாரி ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அரசிடம் முறையான அனுமதி கேட்டும் அளிக்காததால் வரும் 27ம் தேதி காலவரையற்ற போராட்டத்தில் இறங்க உள்ளதாகவும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தண்ணீரை கனிம வளங்கள் பட்டியலில் இருந்து நீக்கி, நிலத்தடி நீரை எடுத்து விற்க உரிய அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.
இதனையடுத்து, தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் கூறியதாவது, மே 27 ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 4500 தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூறினார். மேலும், மேலும் வேலை நிறுத்தத்திற்கு அதிகாரிகளே காரணம் என்றும் தாங்கள் காரணமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எல்லோருக்கும் வாழ்த்துக்கள்'... 'வீடியோ பதிவிட்டு இளைஞர் செய்த விபரீதம்'!
- 'வெறும் ஸ்பேர் பார்ட்ஸ்க்காகதான் சாமி செஞ்சோம்'.. பதற வைக்கும் திருட்டு கும்பல்!
- மனைவி வீட்டுக்குள் வைத்துப் பூட்டியும் கேட்காமல்.. 8 பேர் மீது ஆசிட் ஊற்றிய கணவர்..
- 'பைக்குக்கு வழிவிட சொன்ன மாணவர்களை கத்தியால் குத்திய தந்தை, மகன்'... பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்!
- 'ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் வாங்க வற்புறுத்தக்கூடாது'... 'அதிரடி உத்தரவு!'
- 'தொட்டில் சேலை கழுத்தில் இறுகி'... '11 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்'!
- 'சென்னையில் தீ விபத்து'... 'குடிசை வீடுகள் எரிந்து சோகம்'!
- 'ஜஸ்ட் மிஸ்..' கரகரவென்று சுற்றிய கார்.. உயிரைக் காப்பாற்றிய சீட் பெல்ட்!
- 'ரயில்களில் ஏ.சி. கோச்சில் பெண்களிடம் நகைகள் திருடி'.. 'மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய பலே கொள்ளையர்'!
- 'கோவத்துல அம்பயரை திட்டிட்டேன்'... 'அப்படி பேசுனது தப்புதான்'... 'சாரி சொன்ன வைரல் சிறுவன்!'