Watch Video: பாலத்தில் நின்றுக் கொண்டு மிரட்டியப் பெண்... பதறிப் போன மக்கள்... துரிதமாக செயல்பட்ட போலீசார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மும்பையில் பாலத்தில் நின்றுக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்வதாக மிரட்டிய பெண்ணை போக்குவரத்துப் போலீசார் பேசிக் கொண்டே சாதுர்யமாக மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

நவி மும்பையில் உள்ளது வாஷி பாலம். இந்தப் பாலத்தின் மீது தடுப்பு கம்பிக்கு அடுத்தப் புறம் நின்றுக் கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக அங்கிருந்தவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார். இதனை அறிந்து அப்போது அங்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தப்படியே அவரது அருகில் சென்றனர். ஆனால் போலீசார் அருகில் வருவதைக் கண்ட அந்தப் பெண் கிட்டே வந்தால் குதித்து விடுவதாக மிரட்டிக் கொண்டிருந்தார்.

எனினும் அவரிடம் 3, 4 போலீசார் போலீசார் பேச்சுக் கொடுத்துக்கொண்டே, கீழே விழாதபடி பிடித்து பாதுகாப்பாக மீட்டனர். தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண்ணின் பெயர் பாத்திமா ஷேக் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. அவர் மனநிலை சற்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர் யார், எதற்காக தற்கொலை செய்ய முயற்சித்தார் என்பது குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை நவி மும்பை போலீஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

SUICIDEATTEMPT, MUMBAI, POLICE, NAVI MUMBAI, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்