'கொரோனா 3ம் அலை'... 'சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வார் ரூம்'... அதிரடி ஏற்பாடுகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் இருக்கச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வார் ரூம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில், சென்னையில் கொரோனா மூன்றாவது அலை இம்மாத இறுதியில் பரவ ஆரம்பிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மூன்றாவது அலை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்தச்சூழ்நிலையில் சென்னையில் விதிகளை மீறி மக்கள் கூடும் 9 இடங்களில் பத்து நாட்கள் கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மக்கள் அதிகம் கூடிய 7 டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வார் ரூம் என்ற கட்டுப்பாட்டு அறையைத் துவக்கியுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 30 காவலர்கள் இந்த வார்ரூமில் செயல்படத் துவங்கியுள்ளனர். அதன்படி சென்னை பெருநகர காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்களைச் சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைப் பெற்றுத் தொற்று பரவலைக் கண்டுபிடிக்கக் களமிறங்கியுள்ளனர்.

இந்த வார் ரூம்மில் பணிபுரியும் காவலர்கள் கணினி செயல்பாடுகளிலும் மற்றும் சைபர் தொடர்பான விபரங்கள் பற்றித் தெரிந்தவர்களாக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியிடம் இருந்து தினமும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைப் பெற்று , அவர்கள் கடந்த 15 நாட்கள் யார் யாரைத் தொடர்பு கொண்டார்கள் என்ற அழைப்புகள் தொடர்பான தகவல்களை டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து பெற்று, அதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளைக் கண்டறியத் திட்டமிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்