'தமிழக எல்லையில் நடு ரோட்டில் எழுப்பப்பட்ட சுவர்'... 'திடீரென எழுந்த பரபரப்பு'... அதிகாரிகள் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் சாலையின் நடுவே சுவர் எழுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்கள்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பத்தலபள்ளி, சைனகுண்டா, பொன்னை, கிருஸ்டியான்பேட்டை, சேர்காடு, பரதராமி ஆகிய 6 சோதனைச்சாவடிகளில் பொன்னை, சைனகுண்டா ஆகிய 2 சோதனைச்சாவடிகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து பொன்னை, சைனகுண்டா ஆகிய 2 தமிழக-ஆந்திர எல்லை சோதனைச்சாவடி சாலைகள் இன்று முழுவதுமாக மூடும் வகையில் சாலை நீளத்திற்கு 3 அடி உயரம் வரை சுவர் எழுப்பி சாலைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வ்ருவது தடைபடாமல் இருக்க, ஆந்திராவில் இருந்து பொன்னை வழியாக வரும் வாகனங்கள் கிருஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி வழியாகவும், சைனகுண்டா வழியாக வரும் வாகனங்கள் பரதராமி சோதனைச்சாவடி வழியாகவும் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே வெளிமாநிலத்தில் இருந்து வருவோரை கண்காணிக்கவே இந்த சாலை மூடல் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பிளாஸ்மா தெரபி மூலம்’... ‘பூரண குணமடைந்த முதல் இந்தியர்’... ‘12 நாளில் வென்டிலேட்டரில் இருந்து ஹோம் க்வாரன்டைன்’... ‘மருத்துவர்கள் சாதித்தது எப்படி?’...
- புரட்டிப்போடும் 'கொரோனா' அச்சுறுத்தலிலும்... 'உலகிற்கே' வெளியாகியுள்ள 'நற்செய்தி'... 'ஆச்சரியம்' தரும் நிகழ்வு!...
- 'இரண்டு மாதத்திற்குப் பிறகு... ‘மே 4-ல் இருந்து... ‘லாக் டவுனை நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு’!
- "நிவாரணத்தொகைக்கு எதுக்கு சந்தா கட்டணும்?" .. இளைஞர்களிடம் சிக்கிக் கொண்டு ‘ரோல்’ ஆன போலி அதிகாரிகள்.. 'பளார்.. பளாரென விழுந்த அடி!'
- 'வுஹானை' தாக்கிய 'அதே' வகை வைரஸ்... 'இங்கும்' ஆதிக்கம் அதனாலேயே... நிபுணர்கள் கூறும் 'புதிய' தகவல்...
- 'படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு’... ‘கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில்’.. 'மத்திய அமைச்சர் தகவல்’!
- 'இவ்வளவு நாளா இது தெரியாமலேயே...' 'சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்...' நாமெல்லாம் 'பரம்பரையாக' பாதுகாக்கப்பட்டவர்கள்... 'விஞ்ஞானி கணிப்பு...'
- 'துளிர்த்த நம்பிக்கை'... 'முதல் முறையா நிம்மதி பெருமூச்சு'... உலகத்துக்கே நல்ல செய்தி சொன்ன அமெரிக்கா!
- லாக்டவுனில் சொந்தஊருக்கு ‘தனியாக’ நடந்து சென்ற பெண்.. ‘பள்ளிக்கூடத்தில்’ தங்க வைத்த போலீசார்.. கடைசியில் நடந்த கொடுமை..!
- 'ஸ்டாப் கம்யூனிஸ்ட் சீனா' கையெழுத்து இயக்கம்... 'சில மணி' நேரத்தில் 'கையெழுத்திட்டவர்களின்...' 'மலைக்க வைக்கும் எண்ணிக்கை...' 'அடுத்து அமெரிக்க ஆதரிக்க போகும் நாடு...'