'சிறையில் இருக்கும் சசிகலா'... 'பணம் கட்டியது யாரெல்லாம்'... வெளியான டிடியில் உள்ள பெயர் விவரங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறையில் இருக்கும் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகையைப் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் செலுத்தியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் வரும்  ஜனவரி 27 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையினை கட்ட தவறினால், மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞரான முத்துக்குமார் ரூ. 10.10 கோடியை வரவோலைகளாகச் செலுத்தினார். சசிகலா விடுதலை ஆவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், அபராத தொகையினை செலுத்தியிருப்பதன் மூலம், அவரது தண்டனை காலம் முடிந்து ஜனவரியில் வெளியே வருவது உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே சிறையில் உள்ள சசிகலாவுக்காக யாரெல்லாம் வங்கி வரைவோலை எடுத்தார்கள் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவர் பெயரில் ரூ.3.25 கோடி வரைவோலை எடுக்கப்பட்டுள்ளது. வசந்தா தேவி என்பவர் பெயரில் ரூ.3.75 கோடிக்கு வரைவோலை எடுக்கப்பட்டுள்ளது. ஹேமா என்பவர் ஆக்சிஸ் வங்கியில் 3 கோடி ரூபாய்க்கு வரைவோலை எடுத்து வழங்கியுள்ளார். விவேக் பெயரில் ஆக்சிஸ் வங்கியில் ரூ.10,000-க்கு டி.டி. எடுக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்