'செல்போனில் என்ன இருந்தது'... 'ஏன் ஆதாரங்கள் அழிக்கப்பட்டது'?... 'வெடிக்கும் சந்தேகம்'... போலீசார் எடுத்துள்ள புதிய ரூட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை சித்ராவின் செல்போன் ஆதாரங்கள், படங்கள் அழிக்கப்பட்டுள்ள நிகழ்வு மேலும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
நடிகை சித்ரா இப்படி ஒரு முடிவை எடுப்பார் என அவரது ரசிகர்கள் யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அவரது மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் துரு துருவென இருக்கும் சித்ரா ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பதே பலரின் மனதில் உள்ள கேள்வி.
சித்ராவின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என சித்ராவின் பெற்றோரும், நண்பர்களும் சந்தேகித்தனர். ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுப் பதிவு திருமணம் செய்துள்ளனர். இவை அனைத்தும் பெற்றோர் சம்மதத்துடனேயே நடந்துள்ளது.
கொரோனா காரணமாக இருக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்கிய பின்னர் பெரிய அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தலாம் சித்ரா முடிவு செய்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சித்ரா இப்படி ஒரு முடிவை திடீரென்று எடுத்திருக்கிறார் என்றால் நிச்சயம் மிகப்பெரிய மன அழுத்தத்துக்கும் அதிலிருந்து மீள முடியாத நிலைக்கும் சென்றிருக்கிறார் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
சித்ராவின் மரணத்திற்கு அவரது தாயும், அவரது கணவரும் கொடுத்த அழுத்தமே காரணம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். கணவர் ஹேம்நாத், சித்ராவின் படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து பிரச்சினை கொடுத்ததாகவும், அவர் தொடர்ந்து நடிக்கக்கூடாது என வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சித்ரா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
இறப்பதற்கு முன்பு யார் யாரிடம் பேசி இருக்கிறார்? என்ன பேசி இருக்கிறார்? என்பதை அறிய போலீசார் முயன்றனர். ஆனால் செல்போனில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதாவது காரணம் இருந்ததால்தான் தடையங்கள் அழிக்கப்பட்டுள்ளது எனக் கருதும் போலீசார், செல்போன் பதிவுகளை மீட்டெடுக்க தடயவியல் துறையின் உதவியை நாடியுள்ளார்கள்.
இதனிடையே சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஏற்கனவே 3 நாட்கள் விசாரணை நடந்த நிலையில், இன்று 4-வது நாளாக மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. தடயவியல் துறையின் முடிவுகள் வந்தால் இந்த வழக்கில் மீண்டும் திருப்பங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video : "அந்த ஒரு 'Moment'-க்காக தான் நான் 'தளபதி'ய நேர்ல பாக்காம இருந்தேன்..." 'சித்ரா' சொல்லியிருந்த 'காரணம்'... மனம் நொறுங்கச் செய்யும் 'வீடியோ'!!
- 'மச்சானுக்கு கல்யாணம்.. லீவு கொடுத்தே ஆகணும்'... இதெல்லாம் கூட பரவால்ல... பின்குறிப்பில் இருந்ததுதான் வேற லெவல்.. வைரலான காவலரின் விடுப்பு விண்ணப்பம்!
- வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை... 'இது' தான் காரணம்!.. கதறி அழும் ரசிகர்கள்!.. சோகத்தில் மூழ்கியது திரைத்துறை!
- Video : "கண்டிப்பா இது 'தற்கொலை'யா இருக்காது..." எனக்கு நெறய 'சந்தேகம்' இருக்கு... 'சின்னத்திரை' நடிகை பரபரப்பு 'பேட்டி'!!!
- Video : "எப்போவும் போல 'இந்த' ஒரு விஷயம் அவ நேத்து பண்ணல..." கடைசி 'வீடியோ' எடுக்குறப்போ கூட..." நடிகை 'சரண்யா' பகிர்ந்த 'தகவல்'!!!
- "நீ திரும்ப போராடி இருக்கணும், சித்ரா..." திடீர் அதிர்ச்சியால் மனமுடைந்த சின்னத்திரை 'நடிகர்'!!!
- 'தொடங்கிய ஆர்டிஓ விசாரணை'...'ஹேம்நாத் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்'... 'இத நாங்க எதிர்பார்க்கவே இல்ல'... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- 'கடைசியா இன்ஸ்டாகிராமில் போட்ட ஸ்டோரி'... 'இப்போ வர அது ஆக்டிவா இருக்கு'... நொறுங்கி போன ரசிகர்கள்!
- 'இரவில் டியூட்டி முடித்து வடபழனி சாலையில் நின்ற பெண்'.. ‘தலைமைக் காவலர்’ செய்த ‘மோசமான’ காரியம்! பதற வைக்கும் சம்பவம்!
- முகத்தை மறைக்க ‘கைலி’.. நைசாக கடைக்குள் புகுந்த 2 பேர்.. அதிரவைத்த கொள்ளை சம்பவம்..!