"பொண்ணு கழுத்துல காயம் இருந்துச்சு.." கண்ணீருடன் தவிக்கும் பெற்றோர்கள்.. அன்று ஹோட்டல் அறையில் நடந்த மர்மம் என்ன??

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

VJ-வாக தனது பயணத்தை ஆரம்பித்து, பின்னர் சீரியல் நடிகை முதல் சினிமாவிலும் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தவர் சித்ரா.

Advertising
>
Advertising

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா, ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மனதிலும் இடம்பிடித்திருந்தார்.

அப்படி இருக்கும் சூழ்நிலையில், திடீரென கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோட்டல் அறை ஒன்றில், VJ சித்ரா மரணம் அடைந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

ஹேமந்த் சொன்ன விஷயம்

தனது மரணத்திற்கு முன்பாக ஹேமந்த் என்பவருடன் சித்ராவின் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருந்தது. ஆனால், அவரது மரணத்திற்கு பின்னர் தான், ஹேமந்த்துடன் ஏற்கனவே திருமணம் நடந்த தகவலும் தெரிய வந்தது. இது ஒரு பக்கம் இருக்க, சித்ரா மரணம் தொடர்பாக நிறைய சந்தேகங்களும் எழுந்தது. அவரின் கணவர் ஹேம்நாத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சித்ரா மரணம் அடைந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அவரின் முடிவுக்கான காரணம் பற்றிய மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது. சமீபத்தில், அவரது கணவர் ஹேமந்த், சித்ராவின் மரணத்திற்கு தொடர்புடைய நபர்கள் பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கள், பெரிய அளவில் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

பதில் சொல்லி தான் ஆகணும்

இந்நிலையில், சித்ராவின் பெற்றோர்கள் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துக்களும் அதிக அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது. இதில் பேசிய சித்ராவின் தாயார், "எனது மகளை பொறுத்தவரையில், பெற்றோர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தான் நினைப்பாள். ஒருவரை ஏமாற்றி எல்லாம் சித்ராவுக்கு பழக்கம் கிடையாது. இவை அனைத்துக்கும் ஹேமந்த் தான் காரணம். எனது பெண்ணின் முடிவுக்கு அவர் பதில் சொல்லி தான் ஆக வேண்டும். ஹேமந்த்துக்கு Knockout Test எடுத்தே ஆக வேண்டும்.

மூன்றாம் தேதி எனது மகளை அழைத்து சென்ற ஹேமந்த், அடுத்த நான்கு நாட்களில் என்ன செய்தார்?. பல கோணங்களில் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. உண்மை வர வேண்டும் என்றால், அரசாங்கம் மற்றும் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்ராவுக்கு வந்த நிலைமை, இன்னொரு பெண்ணுக்கு வந்து விடக் கூடாது.

அங்க மட்டும் எப்படி?

அதே போல, அவளை பற்றி இறந்த பின் தவறாக பேசும் போது கேட்கவே வேதனையாக உள்ளது. சித்ரா வாங்கிய காரை வேறு ஒருவர் வாங்கி கொடுத்ததாக செய்தி பரப்புகிறாரகள். என் மகள் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கியது தான் அது. மேலும், சித்ராவின் கழுத்துப் பகுதியில், கடித்த காயம் ஒன்று உள்ளது. அப்படி என்றால், சித்ராவை கடித்தது யார்?. அனைவரும் தூக்கு தான் காரணம் என்கிறார்கள். அப்போது, ஏன் கழுத்தின் ஒரு இடத்தில் மட்டும் காயம் உள்ளது?. எனது மகளை துன்புறுத்தி உள்ளார். ஹேமந்த் மீது மட்டும் தான் சந்தேகம் உள்ளது" என சித்ராவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களின் மகளுக்கு நேர்ந்தது பற்றி விரைவில் தகுந்த நடவடிக்கை எடுத்து நீதி கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க அவர்கள் கேட்டுக் கொண்டனர். தங்களிடம் இருந்த ஆதாரங்களையும் பத்திரிகையாளர்களிடம் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

VJ CHITRA, HEMANTH, PARENTS, விஜே சித்ரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்