கடந்த 6 மாதமாக உதவி.. 'வெண்ணிலா கபடி குழு' நடிகரின் குழந்தையின் படிப்பு செலவை ஏற்ற விஷ்ணு விஷால்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் ஹரி வைரவன் மறைவு குறித்து நடிகர் விஷ்ணு விஷால் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் வெண்ணிலா கபடிகுழு. விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் அவருடன் அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.

மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரி வைரவன்.  இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும்  நடித்திருக்கிறார்.

ஹரி வைரவன் நேற்று நடு இரவில் 12.30 மணியளவில் மரணம் அடைந்துள்ளார். மதுரையை சார்ந்த ஹரி வைரவன் மரணம் ரசிகர்கள் & சக நடிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள கடச்சனேந்தல் முல்லை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஹரி வைரவன் உடல்  வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வெண்ணிலா கபடிகுழு படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால், பத்திரிகையாளர் சந்திப்பில் ஹரி வைரவன் மரணம் குறித்து பேசியுள்ளார். அதில், கடந்த ஆறு மாதமாக ஹரி வைரவனுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ததாக கூறினார். மேலும் குழந்தையின் படிப்பு செலவை ஏற்பதாக ஹரி வைரவன் மனைவிக்கு வாக்கு கொடுத்துள்ளதாகவும் கூறினார். ஹரி வைரவன் மறைவுக்கு முன் தனக்கு அனுப்பிய "உதவிகளுக்கு நன்றி மச்சான்" என்ற  வாய்ஸ் மெசேஜை நேற்று கேட்டதாகவும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

HARIVAIRAVAN, VISHNUVISHAL

மற்ற செய்திகள்