என் பெஸ்ட் ஃப்ரண்ட்னு நினைச்சு தானே எல்லாம் சொன்னேன்...! 'சொல்லிட்டு போன உடனே 4 பேர வச்சு அரங்கேற்றிய மெகா ப்ளான்...' - நட்புக்கு செய்த துரோகம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயகிருபா. கடந்த 10-ம் தேதி அன்று அவரது வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் 4 பேர் வந்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த ஜெபகிருபாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, கை, கால்களை கட்டிப்போட்ட அந்த கும்பல் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 35 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து உடனடியாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அதில் நேரு நகர் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் கொள்ளை நடந்த இடத்தை சுற்றி சந்தேகப்படும்படியாக சுற்றிதிரிந்ததைக் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து விசாரணை தொடங்கியது. அவர் மூலமாக அருண்பாண்டியன் என்ற இளைஞனை கைது செய்து விசாரித்த போது இந்த கொள்ளைச்சம்பவத்துக்கு தலைவராக ஒரு பெண் ஒருவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜெயகிருபாவின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது தோழியான முத்துச்செல்வி என்பவர் இந்த கொள்ளை சம்பவத்திற்கு தலைவராக செயல்பட்டது தெரிய வந்தது. பணத்தேவையால் முத்துச்செல்வி தவித்துக் கொண்டிருந்தபோது, தான் அடகு வைத்த நகைகளை மீட்டு வந்ததை ஜெயகிருபா அவரிடம் பெருமையாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த நகைகளை எப்படியாவது கொள்ளையடித்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற விபரீத எண்ணம் முத்துலட்சுமிக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தன்னுடைய நண்பர்களான அருண்பாண்டியன், கணேஷ்குமார், சோலைச்சாமி, ஹரிஹரன் ஆகியோரை கொள்ளைத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளார்.
இதனை தொடர்ந்து முத்துச்செல்வியையும், கன்னிக் கொள்ளையர்களான 4 இளைஞர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். கொள்ளையடித்த நகைகளையும், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மேக்கப் போட வந்தவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா...! 'பியூட்டி பார்லர் வரும் பெண்கள் தான் மெயின் டார்கெட்...' - நூதன மோசடி...!
- ஒரு கோடி பரிசா...! எனக்கா...? 'கொஞ்ச நேரத்துல வந்த அடுத்த போன்கால்...' இப்படி நடக்கும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல...' - உச்சக்கட்ட ஷாக்கான பாட்டி...!
- 'நகைய என்கிட்ட கொடுத்துட்டீங்கல...' 'இனி கவலை படாம போங்க...' 'ஒரு பவுன் நகைக்கு ஒரு லட்சம்...' - நைட்டோடு நைட்டா ஆள் ஜூட்...!
- இப்படியும் ஒரு ட்ரிக்கா...! 'சானிட்டரி நாப்கின் மூலம்...' '2 பெண்கள் போட்ட பிளான்...' - அதோட வடிவத்தை மாத்தலன்னா சிக்கிப்போம்...!
- தங்கம் விலை இப்படி எகிறுதே...! 'அப்படின்னு ஃபீல் பண்ணவங்களுக்காக...' - மனச குளிர வைக்குற மாதிரி ஒரு சில் நியூஸ்...!
- 63 போலி டெபிட் கார்டு.. 50 லட்சம் ரூபாய் பணம்... 'குடும்பமே சேர்ந்து கூட்டாக பார்த்த வேலை!'.. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்!
- 'பக்கா பிளானோடு...' 'மூணு மாசத்துல மூணு திருமணம்...' '15 நாள்ல ஆள் எஸ்கேப்...' - அதிர வைக்கும் பகீர் பின்னணி...!
- 'விலைக்கு வாங்கிய செகண்ட் ஹேண்ட் காரை, ஆபீஸ் பார்க்கிங்கில் விட்ட நபர்!'.. 'திரும்பி போய் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!'
- என்ன கேட்டாலும் தரும் 'அற்புத விளக்கு' இது...! 'விலை வெறும் ரூ 2.5 கோடி தான்...' 'விளக்க வாங்கிட்டு வீட்டுக்கு போன மனுஷன்...' - ஒரு நிமிஷம் அப்படியே உறைஞ்சு போய்ட்டாரு...!
- 15 லட்சம் கடன் வேணுமா...? வேண்டாமா...? 'அப்போ நாங்க சொல்றத பண்ணுங்க...' '2-வது தடவ கேட்டப்போவே சுதாரிச்சுருக்கணும்...' தினுசு தினுசா ஏமாத்துறாங்க...!