'பெட்ரூமில் மகாலட்சுமி, தண்ணீர் தொட்டிக்குள் ஒரு வயசு பிஞ்சு'... 'பிரம்மை பிடித்தது போல நின்ற மாமனார்'... நெஞ்சை உறையவைக்கும் கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டின் அறையில் மனைவி தூக்கில் சடலமாகக் கிடந்த நிலையில், தண்ணீர் தொட்டிக்குள் ஒரு வயதுக் குழந்தையின் சடலமும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் திருக்குமரன். இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிசிடிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுரை சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகள் மகாலட்சுமியுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தீபக் என்ற ஒரு வயது மகன் உள்ளார். திருக்குமரன் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில், மகாலட்சுமி மற்றும் மகன் தீபக் ஆகிய இருவரும் மாமனார் முருகேசன் வீட்டில் வசித்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று காலை மாமனார் முருகேசன் வெளியில் சென்ற விட்டு மதியம் போல வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர் மருமகள் மகாலட்சுமியைக் கூப்பிட்டார். ஆனால் அவரை காணாத நிலையில் வீட்டைச் சுற்றித் தேடிப் பார்த்துள்ளார். இதையடுத்து மகாலட்சுமியின் அறைக்குச் சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். மருமகள் சடலமாகக் கிடந்த கோலத்தைப் பார்த்த முருகேசன் பிரமை பிடித்தது போல நின்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மருமகளின் சடலத்தைப் பார்த்து அவர் கதறினார். முருகேசனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்கள்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது ஒரு வயது தீபக்கை காணாமல் போலீசார் தேடினார்கள். மேலும் சந்தேகத்தின் பெயரில் காவலர்கள் மாடிக்குச் சென்று பார்த்தபோது, மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இருவரின் மரணம் குறித்துத் தெளிவாகத் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளார்கள். தாயும், ஒரு வயதுக் குழந்தையும் இறந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அவங்க தான் எல்லாதுக்கும் காரணம்... ஒவ்வொருத்தரா கொலை பண்றாங்க"!.. தொடர் மரணங்களால் அலறிய கிராமம்!.. 'சத்தமில்லாம ராத்திரில வந்து'... வயதான தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்!
- ஆணவக்கொலையின் உச்சம்! - "பெத்த மகள, ஓட ஓட விரட்டி... குத்தி 'கொலை' செஞ்சு... பிணத்துக்கு பக்கத்துலயே 'டீ, தம் அடித்த' தந்தை!"
- 'நைட் 1.30 மணி வரை டூட்டி'... 'பார்க்கிங்யில் துடிக்க துடிக்க கிடந்த இளம் மருத்துவர்'... சென்னையை அதிரவைத்துள்ள சம்பவம்!
- 'சாத்தான்குளம் சிறுமி கொலை'... விசாரணையில் வெளியான 'காரணம்'... இதுக்காகவா டா அந்த 'கொழந்தை'ய கொன்னு 'டிரம்'முல அடைச்சீங்க??!.. பதற வைக்கும் 'பின்னணி'!!
- சாத்தான்குளம்: 9 வயது சிறுமி கொலைக்கான 'காரணம்' என்ன?... 'பிரேத' பரிசோதனை அறிக்கை வெளியானது!
- 'நீ கேட்டா எங்க வீட்டு பொண்ண கொடுக்கணுமா'?... 'வழியை மறித்து பொண்ணு கேட்ட இளைஞர்'... காதலியின் சித்தப்பா செய்த பயங்கரம்!
- “உள்ள இழுத்து, கதவ சாத்திட்டு அடிடானு சொன்னாங்க!”.. “என் சாவுக்கு காரணமானவங்கள!”.. தற்கொலைக்கு முன்.. ஐடி ஊழியரின் மனைவி பேசிய உருக்கமான வீடியோவால் பரபரப்பு!
- 'என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டு... நீங்க ஜாலியா வெளில சுத்திட்டு இருக்கீங்களா'!? பழிக்குப் பழி தீர்க்க... டிராக்டரால் உடலை சிதைத்து... அம்மா-மகள் கொடூரக் கொலை!
- “இந்த பொண்ணு சொல்றது உண்மையா?”.. ‘தூங்கும்போது ஐ.டி கணவருக்கு வந்த போன் கால்!’.. தப்பை மறைக்க கணவர் செய்த கொடூரம்!.. மனைவி எடுத்த விபரீத முடிவு!
- 'சிறுவன் அடித்த சிக்ஸர்'... 'பந்து விழுந்த இடத்திலிருந்த தண்ணீர் டிரம்'... 'திறந்ததும் அலறிய சிறுவர்கள்'... ஈரக்கொலையை நடுங்க வைக்கும் சம்பவம்!