"மாமியார் - மருமகள் காம்போ'னா இப்டி இருக்கனும்.." விருதுநகரில் திரும்பி பார்க்க வைத்த தேர்தல் முடிவு
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
விழுந்தது ஒரே ஓட்டு.. "குடும்பத்துல கூட யாருமே ஓட்டு போடல.." ஏமாற்றத்தில் பாஜக வேட்பாளர்
இந்த தேர்தலில், மொத்தம் 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. தேர்தலுக்கு பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணி முதல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதற் கட்டமாக, தபால் ஓட்டுகள் என்னும் பணி தொடங்கியது. அவை முடிவடைந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிகமான இடங்களில், திமுக கட்சி முன்னிலை வகித்து வருகிறது. அதே போல, பல இடங்களில் தேர்தல் முடிவுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், இதில் சில சுவாரஸ்ய சம்பவங்களும் இடம்பெற்று வருகிறது.
திருவாரூர் நகராட்சி தேர்தலில், வார்டு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில், 1 ஆவது வார்டில் எஸ். கலியபெருமாள் என்பவர் வேட்பாளராக களமிறங்கியிருந்தார். அவரின் மனைவி மலர்விழி, நகராட்சி 2 ஆம் வார்டில் போட்டியிட்டார்.
தொடர்ந்து, இன்று வெளியான தேர்தல் முடிவில், கலியபெருமாள் மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகிய இரண்டு பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தம்பதியருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் நகராட்சி தேர்தலில் நடைபெற்றது போன்று ஒரு சம்பவம், விருதுநகரிலும் நடைபெற்றுள்ளது. இங்கு, 27 ஆவது வார்டில், மாமியார் பேபி காளிராஜும், 26 ஆவது வார்டில் மருமகள் சித்ரேஸ்வரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டனர்.
இதில், பேபி காளிராஜ் ஏற்கனவே இருமுறை வார்டு கவுன்சிலராக இருந்தவர் தான். ஆனால், மருமகள் சித்ரேஸ்வரி முதல் முறையாக போட்டி போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று வெளியான தேர்தல் முடிவில், இருவரும் தங்களின் வார்டில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். விருதுநகர் நகர்மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார்-மருமகள் போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும்.
தேர்தல் முடிவுகளின் பரபரப்புக்கு மத்தியில், கணவர் - மனைவி வெற்றியும், மாமியார் - மருமகள் வெற்றியும் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
தேர்தல் முடிவுகள் : முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டை கைப்பற்றிய திமுக
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் முடிவுகள் : முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டை கைப்பற்றிய திமுக
- ஒரே வாக்கில் மாறிய முடிவு.. பாஜக வேட்பாளர் அசத்தல் வெற்றி
- சென்னை மாநகராட்சியின் தேர்தல் முன்னணி நிலவரம்.. எந்தக் கட்சி முன்னிலை?
- லீவு கேட்ட மாணவரை பெற்றோரை கூட்டி வர சொன்னாரே.. விருதுநகர் கலெக்டர்.. அவரா இப்படி ?
- 3 வருடமாக தொடர்ந்த உறவு.. ஓட்டம் பிடித்த மாமியார் - மருமகன்.. கலங்கி நிற்கும் மகள்..
- “கல்நெஞ்சக்காரர்...” கலெக்டரை ஜாலியாக கிண்டல் செய்த எஸ்பி..!
- சார், இங்க செமையா 'மழை' பெய்யுது...! ஸ்கூல், 'காலேஜ்'லாம் லீவ் விடுவீங்களா...? 'கேள்வி எழுப்பிய விஜய் ரசிகருக்கு...' - விருதுநகர் கலெக்டர் 'நச்' பதில்...!
- 'நடுரோட்டில் ஆக்ரோஷமாக மாறிய மாமியார்'... 'பளார் பளார் என மருமகனுக்கு விழுந்த செருப்படி'... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வீடியோ!
- 'ஜோரா இயங்கிட்டு இருந்த ஹோட்டல்...' 'திடீர்னு இடி விழுந்தது போல ஒரு சத்தம்...' - ஒரே செகண்ட்ல அப்படியே தலைகீழா ஆயிடுச்சு...!
- 'ஓடியாங்க... ஓடியாங்க... இங்க வந்து பாருங்க'!.. ஓட்டு போட்ட பின்... வாக்குச்சாவடியில் அலறிய வாக்காளர்கள்... வாக்குப்பதிவை நிறுத்திய அதிகாரிகள்!