"முதல் காதலியும் போய்ட்டா.. இப்ப இரண்டாவது காதலியும்.." மனமுடைந்த காதலன்.. "நீ இல்லாத உலகத்துல".. விபரீதத்தில் முடிந்த காதல்
முகப்பு > செய்திகள் > தமிழகம்விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த சிறுகுளம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார்.
இவர் கோட்டைநத்தம் என்னும் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். விருதுநகரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியாராக அவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதனிடையே, இருவரும் அடுத்தடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், விருதுநகர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு
இது பற்றி, விருதுநகர் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. சுமார் ஓராண்டுக்கு முன், வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு இருந்ததால், பிரவீன்குமாரின் முன்னாள் காதலி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்து வேதனையில் உடைந்து போன பிரவீன்குமாரும், விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரை மீட்ட உறவினர்கள், விருதுநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மருத்துவமனையில் மலர்ந்த காதல்
அங்கு தான் பிரவீன்குமாரும், செவிலியரான இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்து அறிமுகமாகி உள்ளனர். மருத்துவமனையில் பிரவீன்குமார் இருந்த போது, அவரின் காதல் கதையை நர்ஸ்ஸிடம் சொல்லியுள்ளார். இதனைக் கேட்டு மனம் உருகிய அவரும், பிரவீன் மீது காதல் வயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கண்டித்த ஊழியர்கள்
இதன் பின்னர், அடுத்த கொஞ்ச நாட்களில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். காதலி வேலை பார்த்து வந்த மருத்துவமனைக்கு சென்று, அடிக்கடி தனியே சந்தித்து பேசியுள்ளார் பிரவீன்குமார். மருத்துவமனை வளாகத்தில் நிற்கும் காதல் ஜோடியை பார்த்து, அங்குள்ள ஊழியர்கள் இதனை கண்டித்ததாக கூறப்படுகிறது.
அடிக்கடி சண்டை
இதன் பெயரில், பிரவீன்குமாரின் காதலி மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்த விவகாரம் பெரிதாகி வெடித்துள்ளதாக தெரிகிறது. இதனால், மனம் உடைந்து காணப்பட்ட இளம்பெண், விரக்தியில் பணி முடிந்து வீடும் திரும்பும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது முடிவுக்கு யாரும் காரணமில்லை என எழுதி வைத்து விட்டு, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரவீன்குமாரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
தான் இரண்டாவதாக காதலித்த பெண்ணும், தற்கொலை செய்து கொண்டதை அறிந்து உடைந்தே போன பிரவீன்குமார், காதலியைப் போல, ரெயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இருவரின் மரணம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பிரவீனின் மொபைலை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது, அதில், "நீ இல்லாத இந்த உலகத்தில் நான் வாழ மாட்டேன். நானும் உன்னோடு வருகிறேன். இங்கு நாம் ஒன்று சேர்ந்து வாழ முடியாது. இறந்த பிறகாவது நாம் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம்" என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதே போல, தங்களின் சாவுக்கு காரணம், தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தான் என்றும் பிரவீன்குமார் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
காதலித்து வந்த இளம் ஜோடி, ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பற்றது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடிக்கடி காணாமல் போன நகைகள்.. சிசிடிவி கேமராவை வச்சுட்டு வெயிட் பண்ண உரிமையாளர்.. இறுதியில் வெளிவந்த உண்மை..!
- நடு ரோட்ல கும்ஃபூ.. "அங்க என்ன சத்தம்".. போலீசை கண்டதும் தெறித்து ஓடிய போதை ஆசாமி..!
- "இனி உன் அப்பா திரும்பி வரவே மாட்டாரு.." ஒரே ஒரு மொபைல் அழைப்பால் நொறுங்கி உடைந்த இளம்பெண்.. அதிர்ச்சி பின்னணி
- எனக்கு வேற வழி தெரியல சார்..Office ஐ வீடாக பயன்படுத்தும் ஊழியர்.. வைரல் வீடியோ..!
- ஸ்ட்ரிக்ட்டா இருந்த ஆசிரியர்.. 30 வருஷம் கழிச்சு மாணவன் எடுத்த ரிவெஞ்ச்.. பதறிப்போன போலீஸ் அதிகாரிகள்..!
- 'உபாதை போன கேப்பில் ரூ.2.50 கோடி அபேஸ்'.. மதுரையையே மிரள வைத்த வழிப்பறி..கெத்து காட்டிய காவல்துறை..!
- "என் மனைவி பெண்ணே கிடையாது".. உச்ச நீதிமன்றத்தில் கணவர் கொடுத்த வித்தியாசமான விவாகரத்து மனு..!
- ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி ரொம்ப தூரம் போறவங்களுக்கு அந்த சிக்கல் இருக்காது.. வெளியான அசத்தல் அறிவிப்பு..!
- ரயில்வே ஸ்டேஷனில் வலிப்பு நோயால் சரிந்த நபர் .. ஓடிப்போய் உதவிய பெண் போலீசுக்கு குவியும் பாராட்டுகள்..!
- கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறது ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.. இளைஞர் போட்ட வேறலெவல் ப்ளான்.. செம வைரல்..!