‘சார்… மழை சார்…சார்’- மாணவனின் கேள்விக்கு கலெக்டரின் கலக்கல் பதிலை பாருங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் முழுவதும் நேற்று இரவு முழுவதும் விடாது கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. சென்னையில் எல்லாம் இரவு ஆரம்பித்த மழை இடைவிடாது காலையில் வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தலைநகர் சென்னை உட்பட 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று முதல் விருதுநகர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியான மழையால் விருதுநகர் மாவட்டத்தில் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. விடாத கனமழையால் இன்று நவம்பர் 26-ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பதாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆனால், க்லெக்டர் மேகநாத ரெட்டி விருதுநகர் மாவட்டத்துக்கான விடுமுறையை அறிவிக்கும் முன்னரே மாணவர் ஒருவர் ட்விட்டர் மூலம் கலெக்டரிம் மழைக்காக விடுமுறை கேட்க அதற்கு கலெக்டரும் ட்விட்டர் வாயிலாகவே பதில் அளித்துள்ளார். கலெக்டரின் பதில்தான் தற்போது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது.

மாணவர் ஒருவர், “சார், விருதுநகரிலும் பலமா மழை பெய்து சார்…” என கலெக்டர் மேகநாத் ரெட்டியை டேக் செய்ய அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார். கலெக்டர் தனது ட்வீட்டில், “லீவுக்காக நீங்கள் தொடர்ந்து நடத்திய பிரார்த்தனைகளுக்கு நன்றி. நம் ஊரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது தம்பி. அதனால், நாளை 26-11-2021 ஒரு நாள் மட்டும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையப் பயன்படுத்தி வீட்டுப்பாடத்தை முடியுங்கள். ஆசிரியர்கள் பரிசோதிப்பார்கள். பாதுகாப்பாக இருங்கள்” என பதில் அளித்துள்ளார்.

HEAVYRAIN, TNRAINS, RAINALERT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்