லீவு கேட்ட மாணவனை Parents ஐ கூட்டிட்டு வரச்சொன்னாரே.. விருதுநகர் கலெக்டர்.. இவரா இப்படி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விருதுநகர்: லீவு கேட்ட மாணவரை அப்பா அம்மாவை கூட்டிவா என்று கூறிய விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத் ரெட்டி, அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்களை வளர்க்கும் விதமாக Coffee With Collector என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
ஓகோ.. தோனி அந்த டைம்ல தான் எல்லாத்தையும் சொல்லுவாரா..? சிஎஸ்கே சிஇஓ சொன்ன சீக்ரெட்..!
ட்விட்டரில் பிஎம் முதல் சிஎம் வரை யாரை வேண்டுமானாலும் டேக் செய்து கேள்வி கேட்க முடியும். ஆனால் என்ன அவர்கள் விரும்பினால் பதிலளிப்பார்கள் விரும்பாவிட்டால் கண்டுகொள்ள மாட்டார்கள். அதுபோல தான் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பலரும் டுவிட்டர் கணக்கு வைத்துள்ளார்கள் . அவர்களின் தனிப்பட்ட கணக்கு என்று இருக்கும். அதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற பெயரிலும் அதிகாரபூர்வ கணக்கும் இருக்கும்.
அந்தவகையில் பல்வேறு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் டுவிட்டர் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு , அல்லது மக்களின் கோரிக்கைகளுக்கு நேரடியாகவே ட்விட்டரில் பதிலளிப்பார்கள் . இதன் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சென்று காத்திருந்து சந்திக்க வேண்டிய அவசியம் பல்வேறு விவரங்களுக்கு இப்போது இல்லை.
பொதுவான மக்கள் கோரிக்கைகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் ஆர்வமுடன் பதிலளிக்கிறார்கள். மக்கள் பிரச்சனை ஆகட்டும் மக்களின் அன்றாட தேவைகள் ஆகட்டும் பல்வேறு விஷயங்களுக்கும் டுவிட்டரில் அவர்கள் பதில் அளிப்பது ஆரோக்கியமானதாக உள்ளது. அந்தவகையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் கடந்த ஆண்டு தனது ட்விட்டர் கணக்கில் திருகார்த்திகை தினத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதை விருதுநகர் ஆட்சியர் மேகநாத் ரெட்டிக்கு டேக் செய்திருந்தார்.
இந்த டிவீட்டை பார்த்த ஆட்சியர் மேகநாத், பெற்றோரை அழைத்து கொண்டு என்னை வந்து பார்க்கவும என்று பதிலளித்திருந்தார். அவ்வளவுதான் உங்கள் லீவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்ன ஆளை விட்டால் போதும் என்று அந்த மாணவன் நான் அப்படியே எஸ்கேப். பலரும் அப்போது மாவட்ட ஆட்சியரின் இந்த பதிலை பார்த்து ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ என்று ட்விட்டரில் பேசினார்கள்.
அதேபோல் இன்னொரு மாணவன் கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மற்ற மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆட்சியர் மேகநாத் ரெட்டிக்கு 'சார் விருதுநகர் மாவட்டத்துலயும் ஹெவி ரெயின் சார்' என போட்டிருந்தார். உடனே மேகநாத் ரெட்டி, லீவு கிடைக்க வேண்டும் என உங்களது தொடர் பிரார்த்தனைக்கு நன்றி தம்பி. நம்முடைய மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பயன்படுத்தி வீட்டுப் பாடத்தை முடியுங்கள், அதை மறுநாள் ஆசிரியர் சரிபார்ப்பார். பாதுகாப்பாக இருங்கள் என ஆட்சியர் பதில் தெரிவித்திருந்தார்.
இப்படி லீவு கேட்டால் வீட்டுப் பாடம் எழுது, பெற்றோரை கூட்டி வா என சொல்றாரே, என்று பலரும் இவர் எல்லாம் நமக்கு வாத்தியாரா வந்தால் அவ்வளவுதான் என்று திகைத்துப் போனார்கள். ஆனால் யை விருதுநகர் ஆட்சியர் மேகநாத் ரெட்டி தொடங்கி வைக்கிறார். அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த ஜனவரி முதல் Coffee With Collector என்ற நிகழ்ச்சியை நடத்தி கொண்டு உள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் மேகநாத் ட்விட்டர் பக்கத்தில் , விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா 15 மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதிவாரம் ஒரு முறை அவர்களை அழைத்து அவர்களிடம் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது" என கூறி இருந்தார்.
இந்த நிகழ்ச்சி தற்போது 5 வாரங்களை கடந்து உள்ளது. மாணவர்களின் நலன் சார்ந்து முடிவெடுப்பதில் அர்ப்பணிப்பு காட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத் ரெட்டியின் செயல் பலராலும் பாராட்டப்படுகிறது.
மற்ற செய்திகள்
இரண்டே 'மேட்ச்' மூலம்.. ஒட்டு மொத்தமா திரும்பி பார்க்க வைத்த வீரர்.. "ஐபிஎல் ஏலம் களை கட்டப் போகுது"
தொடர்புடைய செய்திகள்
- தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மாவட்டம் வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில்.. வெளிவந்துள்ள அல்டிமேட் தகவல்
- சபாஷ்! தமிழக அரசு ரேஷன் கடைகளில் எடுத்த சூப்பர் முடிவு.. இரண்டு மாநகரங்களுக்கு இப்ப குட்நியூஸ்
- தமிழ்நாட்டில் எலான் மஸ்க்-ன் டெஸ்லா? வாங்க.. வாங்க.. நம்ம பசங்கலாம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க!
- ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்... ஒரே நாளில் உலக பேமஸ் ஆன கொல்லிமலை
- லீவு கேட்ட மாணவரை பெற்றோரை கூட்டி வர சொன்னாரே.. விருதுநகர் கலெக்டர்.. அவரா இப்படி ?
- கடைசி பந்துக்கு '5 ரன்' தேவை...! 'சிக்ஸ்' அடித்து மேட்ச்சை முடித்த வீரர்...! - சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு அணி...!
- 'அக்கா 8 அடி பாஞ்சா'... 'தங்கச்சி 16 அடி பாஞ்சிட்டாங்க'... சகோதரிகளை கொண்டாடும் ஒட்டுமொத்த தேசம்!
- 'Sorry தம்பி, உங்களுக்கு வேலை இல்லை'... 'கேம்பஸ் இன்டர்வியூவில் நிறுவனம் சொன்ன காரணம்'... 'ஆனா இன்னைக்கு கண்டிப்பா பீல் பண்ணுவாங்க'... வேற லெவல் சம்பவம் செய்த இளைஞர்!
- நாடே கொண்டாடிய வைரல் ‘காதல் ஜோடி’.. ஏன் இப்படியொரு முடிவு எடுத்தாங்க..? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!
- நீ என்ன பெரிய 'கலெக்டரா'ன்னு நக்கலா கேட்டாங்க...! 'விட்டுட்டு போன கணவன்...' - வாழ்க்கையில போராடி சாதித்த பெண்மணி...!