'பேட்டிங் வரிசையில் முக்கிய மாற்றம்'... 'திட்டவட்டமாக கூறிய விராட் கோலி’... 'அப்போ அந்த இளம் வீரருக்கு வாய்ப்பு?'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு  எதிரானப் போட்டியில் பேட்டிங் வரிசையில் முக்கிய மாற்றம் நிகழ உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகளை வாஷ் அவுட் முறையில் இந்திய அணி முழுமையாக வென்றுள்ளது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பங்கேற்கிறது. அதில் முதல் போட்டி ஹாமில்டனில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் காயம் காரணமாக பங்கேற்காத நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக ரோகித் சர்மாவும் விலகினார்.

இதையடுத்து இந்திய அணியில் மயங்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவரும் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாவதுடன், இந்திய அணிக்காக ஆடிராத இவர்கள் இருவரும் நாளைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க உள்ளதாக கேப்டன் விராட் கோலி உறுதி செய்துள்ளார். ஏனெனில் தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் 5-வது இடத்தில் களமிறங்க உள்ளதாக  விராட் கோலி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

கீப்பிங் மற்றும் பினிஷிங் ரோலில் கே.எல். ராகுல் பழகிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று விராட் கோலி கூறியுள்ளார். விராட் கோலி மூன்றாம் வரிசையிலும், வழக்கம்போல ஷ்ரேயாஸ் ஐயர் நான்காம் வரிசையிலும் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காயத்திலிருந்து திரும்பியுள்ள ரிஷப் பந்த்திற்கு வாய்ப்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதேபோல், நியூசிலாந்து அணியில் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் 2 போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை.

CRICKET, VIRATKOHLI, KLRAHUL, RISHABHPANT, INDVSNZ, PRITVI SHAW, MAYANK AGARWAL, ODI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்