விபத்தில் ‘இறந்துவிட்டார்’ என நினைத்தபோது... ‘காவலர்’ செய்த காரியத்தால் ‘நிமிடங்களில்’ நடந்த அதிசயம்.. வைரலாகப் பரவும் வீடியோ..
முகப்பு > செய்திகள் > தமிழகம்விபத்தில் சிக்கி அசைவற்றுக் கிடக்கும் முதியவரை காவலர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் பிராட்டியூரைச் சேர்ந்த அப்துல்காதர் (65) என்பவர் கடந்த மாதம் 6ஆம் தேதி தனது மனைவி மற்றும் பேரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். வண்ணாங்கோவில் அருகே போய்க்கொண்டிருந்தபோது கார் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பெரியளவில் காயம் ஏற்படாத நிலையில் அப்துல் காதர் மட்டும் சுயநினைவின்றி அசைவற்று கிடந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர் இறந்துவிட்டார் என நினைக்க, அந்த வழியாக வந்த காவலர் பிரபு உடனடியாக வந்து அவருக்கு உதவியுள்ளார். அசைவற்று கிடந்த அப்துல் காதரின் மார்பில் கை வைத்து பலமுறை அழுத்திய காவலர் பிரபு, வாய் வழியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுத்துள்ளார். அதன்பின்னர் அப்துல் காதர் மீண்டும் கண் விழித்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாகப் பரவி வருகிறது.
இதுகுறித்துப் பேசியுள்ள காவலர் பிரபு, “சம்பவத்தன்று அப்துல்காதர் அசைவற்று கிடந்ததால் அனைவரும் அவர் இறந்துவிட்டார் என நினைத்தார்கள். ஆனால் அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து காவலர் பயிற்சி மற்றும் பேரிடர் மீட்புப் படை பயிற்சியின்போது சொல்லிக்கொடுத்ததை வைத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளித்தேன்.
அவருக்கு தொடர்ந்து 3 நிமிடங்கள் செயற்கை சுவாசம் அளித்ததில், அவர் மூச்சுவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினார். இப்படி செய்வதன்மூலம் 70 சதவிகிதம் உயிரைக் காப்பாற்றிவிடலாம். இதுபோல பலமுறை செய்துள்ளேன். ஒரு மாதத்திற்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவுவதால் பலரும் அழைத்துப் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
‘மாட்டுக்கு தண்ணி வைக்க போனாங்க’! ‘ஆனா இப்டி நடக்கும்னு நெனைக்கலையே’! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
தொடர்புடைய செய்திகள்
- ஒரே ‘செகண்ட்’ தான்... பாய்ந்துவந்து கையைக் ‘கவ்விய’ சிங்கம்... ‘பதறவைக்கும்’ வீடியோ...
- VIDEO: ‘கார் மோதி தூக்கி வீசப்பட்ட தாய்’!.. ‘ஆக்ரோஷமான மகன்’!.. வைரலாகும் வீடியோ..!
- 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து... சமையல் மாஸ்டருக்கு நேர்ந்த பரிதாபம்!
- ‘விக்கெட்’ எடுக்கலன்னா என்ன... பந்து கிடைத்தும் ‘ரன் அவுட்’ ஆக்காமல்... இதயங்களை ‘வென்ற வீரர்’...
- 'செல்பி' மோகத்தால்... இளைஞருக்கு 'நேர்ந்த' விபரீதம்... 2-வது நாளாக உடலைத்தேடும் போலீசார்!
- தன் கையால் செய்த பரிசுப் பொருளை... ஆசையாக காதலிக்கு கொடுக்க நினைத்து... இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... மருத்துவர்களால் நடந்த அதிசயம்!
- ‘டிராக்டரை முந்திய டிப்பர் லாரி’!.. ‘சடன் பிரேக் போட்டு லாரி டயரில் சிக்கிய பைக்’! கைக்குழந்தையுடன் சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்..!
- மாநகரப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து... ஒரே செகண்டில்... பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!
- டேய் தம்பி 'ஆபாச' படம் பாத்தியா?.. நெல்லை இளைஞருக்கு 'மிரட்டல்'.. வைரலான 'ஆடியோ'.. யார் காரணம் தெரியுமா?
- ‘டீ குடிக்கப் போன சேல்ஸ் மேன்’.... ‘ஸ்கூட்டர் மீது மோதி’... ‘30 அடி தூரம் இழுத்துச் சென்ற கார்’... ‘பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்’!