"என் மகன் பேட்டி கொடுத்தது தப்பா.. வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்க".. Viral சிறுவனின் தாய் கண்ணீர் பேட்டி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அப்துல் கலாம். அப்படிச் சொன்னால் அந்த சிறுவனை தெரியாது. மனித நேய சிறுவன் என்றால் சட்டென்று நம் அனைவருக்கும் அவனுடைய கனிவான முகம் ஞாபகம் வரும். "என்னையும் தான் எல்லாரும் பல்லன்னு கூப்பிடுறாங்க.. ஆனா எல்லாரையும் எனக்கு பிடிக்கும்" எனச் சொல்வதற்கு இந்த சமூகத்தின் மீது எத்தனை அன்பு வேண்டும்? அத்தனையும் அப்துலுக்கு வாய்த்திருக்கிறது.

Advertising
>
Advertising

"என் போட்டாவ மார்ஃபிங் செஞ்சிருக்காங்க"..சச்சின் பரபரப்பு புகார்..என்ன நடந்துச்சு..?

சிறுவனின் பேட்டி வைரலானதும் சமூக வலை தளங்களில் பலரும் அப்துலை பாராட்டி வந்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறுவனை நேரில் வரவழைத்து பாராட்டியதோடு, தனது பேச்சையும் செயலும் எல்லாக் காலமும் கடைபிடிக்கவேண்டும் என அப்துலை வலியுறுத்தி உள்ளார்.

அனைவரையும் நேசிக்கும் மாபெரும் உள்ளம் சிறுவனுக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், அதுவே தங்களுக்கு இடையூறாக இருப்பதாக சிறுவனின் தாய் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை கண்ணகி நகரில் வசிக்கும் திவ்யா (எ) தில்ஷத் பேகம் கலப்பு திருமணம் செய்துகொண்டதால் தான் அனுபவிக்கும் சிரமங்கள் குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலிடம் பகிர்ந்துகொண்டார். முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மாணவியான பேகம், வர்தா புயலின்போது தங்களது வீட்டினை பறிகொடுத்தாக கூறுகிறார். முதுகலை படிப்பு படித்திருந்தாலும் மதம் மாறி திருமணம் செய்துகொண்டதால் தங்களை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை என பேகம் கூறுவது மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் உலுக்கும் சொல்லாக அமைந்துள்ளது.

இதுபற்றி அவர் பேசுகையில்,"வர்தா புயல்ல எங்க சொந்த வீடு இடிஞ்சி போச்சு, அத சுத்தி என் கணவரோட சொந்தக்காரங்க எல்லாரும் இருந்தும், நாங்க கலப்பு திருமணம் என்பதால் எங்களுக்கு தங்குவதற்கு இடம் ஒதுக்கி தரவில்லை. நாங்களும் வீடு இடிஞ்சதால அரசாங்கத்திற்கு மனு கொடுத்தோம் எதற்கும் பதில் வரவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டோம். பின்னர் இப்படி ஒரு வாடகை வீட்டில் இருக்கும்போது, என் பையன் ஏதோ பேசினான் என்பதற்க்காக இந்த வீட்டையும் உடனடியாக காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கு செல்வோம். அதுவும் காரணமே சொல்லவில்லை, அவர்களது சொந்தகாரங்க வருகிறார்களாம், உடனடியாக காலி செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். இந்த பையன் பேசுனது தப்பா? எதுவும் தப்பா பேசிட்டானா?... அவனுக்கு தோன்றத பேசிருக்கான்." என்றார்.

மேலும், வேலை கேட்டு செல்லும் இடங்களில் கலப்பு திருமணம் என்பதால் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் பேகம் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொருளாதார சிக்கலில் தவிக்கும் தனது குடும்பத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமையை அரசு வழங்கினால் போதும் என்கிறார் பேகம்.

எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் அவற்றை அமைதியுடன் கடக்க கற்றுக்கொண்டதாக கூறும் பேகம், தன் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தால் அது தனக்கு பேருதவியாக இருக்கும் என்கிறார். அதுமட்டும் அல்லாமல் தன்னுடைய கல்வி பிறருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்க்காகவே ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள் என அன்பு மொழி பேசிய சிறுவனின் குடும்ப சூழ்நிலை அறிந்து பலரும் இணையதளத்தில் கவலை தெரிவித்துவருகின்றனர்.

வரலாற்றில் முதன்முறையாக நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்றுகிறதா பாஜக? ஆனா அதுக்கு அந்த விஷயம் நடக்கணுமே..?

BOY, FAMILY, FACING PROBLEMS FOR THE INTERVIEW, சிறுவன், தாய்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்