'இது ரோஜா அபிஷேகம் இல்ல'... 'மிளகாய் அபிஷேகம்'... காண்போரை மிரள வைத்த சாமியார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியில் உள்ள பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு சாமியார் மீது கார மிளகாய் அபிசேகம் செய்த சம்பவம் பக்தர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் கடவுள் முருகனின் பிறந்த நாள் தைப்பூச விழாவாக உலக தமிழர்களால் வருடந்தோறும் வெகு விமரிசையாக, பக்தியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் பாத யாத்திரையாக முருகனின் சந்நிதிக்கு செல்வது வழக்கம்.
அதோடு பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகில் வேல் குத்தி செல்லுதல், வெறும் கைகளால் கொதிக்கும் எண்ணையில் வடை சுடுதல் என பல விதமான முறைகளில் கடவுள் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்து வழிபடுவர்.
இந்த வருட தைப்பூசத் திருவிழா தமிழகம் உள்பட உலகின் பல நாடுகளில் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டையில் பாலதண்டாயுதபானி என்ற முருகன் திருக்கோயில் உள்ளது. பிரசத்தி பெற்ற இந்த கோயிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பாலதண்டாயுதபானி திருக்கோயிலில் இந்த வருட தைப்பூச விழாவும் பக்தர்கள் சூழ விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த கோயிலில் அருள்ஜோதி என்ற சாமியார் நீண்ட காலமாக பூசாரியாக பணியாற்றி வருகிறார்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சாமியாரான அருள்ஜோதி மீது மார்பு மீது உரக்கல் வைத்து அரிசி இடித்து மாவாக்கப்பட்டது. மேலும், கண்ணை கலங்க வைக்கும் காய்ந்த காரமிளகாயை அரைத்து அந்த கரைசலை பக்தர்கள் எதிரிலேயே அருள்ஜோதி மீது அபிஷேகம் செய்யப்பட்டது.
அப்போது ஏராளமான பக்தர்கள் 'அரோகரா' என விண்ணைப் பிளக்கும் பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து மூலவரான பாலதண்டாயுதபானி முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தைப்பூசத்திற்கு முருக பக்தர்கள் பலர் பல்வேறு நேர்த்திக்கடன்கள் செய்து வரும் நிலையில், செஞ்சியை அடுத்த அருள்ஜோதி சாமியாரின் மிளகாய் அபிசேகம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- குட் பை...! 'உங்க எல்லாரையும் விட்டு போறேன்...' 'தங்கச்சிய நல்லா பாத்துக்கோங்க...' - ஆயுத படைக் காவலரின் அதிர்ச்சி முடிவு...!
- “நானா கொளுத்திக்கல!!”.. ‘லாக்டவுனில் நடந்த காதல் திருமணம்!’.. ‘ஒரே மாதத்தில் நடந்த கோர சம்பவம்’!.. ‘இளம் பெண் அளித்த பரபரப்பு வாக்குமூலம்’!
- 'சென்னையில் மட்டுமா? இங்கயும் 'கொரோனாவின்' அட்டூழியம் 'குறையல'!.. மேலும் 'சில' மாவட்டங்களில் 'ஊரடங்கு'!
- 'குடும்பத்தையே சிதைத்த கொரோனா!'.. தாய் மகன்கள் உட்பட 3 பேர் பலி!.. இதயத்தை உறைய வைக்கும் சோகம்!
- தலைக்கேறிய டிக்-டாக் மோகம்!.. பெற்ற குழந்தைகளை விடுத்து... கள்ளக்காதலனை தேடி ஓடிய பெண்!.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
- 'பிரபல' ஓடிடி தள 'வெப் சீரிஸ்' சர்ச்சை! .. வெளியாகும் முன்பே இயக்குநர், தயாரிப்பாளர் மீது பாய்ந்த வழக்கு!
- "என் சாமி... என் அக்கா... என் பக்கத்துலயே இருக்கும்!".. நொறுங்கிப்போன குடும்பம்!.. சரமாரி கேள்விக்கு பதில் என்ன?.. நெஞ்சை ரணமாக்கும் ஜெயஸ்ரீ தங்கையின் கதறல்!
- ‘அப்பா.. தொண்டை வறண்டு போச்சுப்பா’.. கண்கலங்க வைத்த விழுப்புரம் சிறுமியின் ‘இறுதி’ நிமிடங்கள்..!
- ‘நாங்களும் மனுஷங்கதான்’.. ‘எங்களுக்கும் பசி எடுக்கும்’.. சகோதரியா நினைச்சு ‘உதவி’ பண்ணுங்க.. திருநங்கைகள் வேதனை..!
- 7 தனிப்படைகள்... 3 மொழி போஸ்டர்!... வாட்ஸ் அப் மெசேஜ்!... விழுப்புரத்தில் மாயமான கொரோனா நோயாளி சிக்கியது எப்படி?... தமிழக போலீஸின் தரமான 'த்ரில்' சம்பவம்!