கணவர் இழப்பால் கதறித் துடித்த மனைவி.. அழுதுகிட்டு இருக்கும் போதே பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல காலமாக இணைந்து வாழ்ந்த கணவர் உயிரிழந்த சூழலில், அடுத்து மனைவிக்கும் நேர்ந்த துயரம், குடும்பத்தினரை மீளாத் துயரில் ஆழ்த்தி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "ஆர்டர் செஞ்சது 12,000 ரூபா டூத் ப்ரஷ், ஆனா பார்சல்ல வந்தது..".. பெண் வாடிக்கையாளரின் வைரல் Tweet.!
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 71). இவருக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில் சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் அனைவரையும் கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, குப்புசாமி உடலை அவரது மகன்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கண்டாச்சிபுரத்திற்கும் கொண்டு வந்துள்ளனர். இதன் பின்னர் குப்புசாமியின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் அங்கே தீவிரமாக நடந்து கொண்டிருக்க, குப்புசாமி மரணம் அங்கிருந்தவர்களை நிலைகுலையவும் வைத்திருந்தது.
மேலும் இத்தனை ஆண்டுகள் தன்னுடன் கணவனாக இருந்து பல்வேறு தருணங்களில் உடன் இருந்து பார்த்துக் கொண்ட குப்புசாமியின் இழப்பு அவரது மனைவி சரஸ்வதியை கடுமையாக பாதிக்கவும் செய்திருந்தது. இந்த நிலையில் அங்கே கூடி இருந்த அனைவருக்கும் மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்துள்ளது. குப்புசாமி உடல் அருகே இருந்த அழுது படி இருந்த அவரது மனைவி சரஸ்வதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
கணவரின் பிரிவைத் தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்த மனைவியும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் இன்னும் அதிக சோகத்தை ஏற்படுத்தியதுடன் இறப்பில் கூட இணை பிரியாத தம்பதி என குப்புசாமி மற்றும் சரஸ்வதி ஆகியோரை உருக்கத்துடனும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | முதல் நாளே ஜடேஜாவுக்கு டெஸ்ட் வச்ச கோச் டிராவிட்.. மனுஷன் அசால்ட் பண்ணிட்டாப்ல..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- லாட்டரியில் விழுந்த ரூ.12 கோடி.. EX-க்கு கிஃப்ட் கொடுக்கப்போய்.. மனைவியிடம் சிக்கிய கணவன்.. சோனமுத்தா மொத்தமும் போச்சா..
- ஒரு வாரமா வீட்டுக்குள்ள இருந்து துர்நாற்றம்.. சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர்.. விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள்..!
- "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்".. 35 வருட காதல் மனைவிக்காக பைக்கில் கணவர் ஒட்டிய ஸ்டிக்கர்!!
- கணவரைப் பற்றி மலாலா செய்த ட்வீட்.. Poll வச்சு கருத்து கேட்ட கணவர்😅.. வைரல் போஸ்ட்..!
- மறுமணம் குறித்து ஸ்டேட்டஸ் வைத்த பெண்?.. ஆத்திரத்தில் கணவன் செஞ்ச பகீர் காரியம்.. மதுரையில் பரபரப்பு..!
- மருமக பொண்ணுக்கு 500 கிலோ மாலை.. தாய்மாமன் சீருன்னா சும்மாவா.. அசர வைக்கும் வீடியோ..!
- "ஒரு உயிர் வரபோற நேரத்துல".. கர்ப்பிணி பெண், கணவர் பயணித்த காரில்.. திடீரென நடந்த அசம்பாவிதம்!!
- "நான் உயிரோட தான் இருக்கேன்".. இறந்த கணவரை உணவகத்தில் பார்த்ததாக பெண் சொன்ன விவகாரத்தில் பரபரப்பு ட்விஸ்ட்..
- உணவால் இறந்ததாக கருதிய உறவினர்கள்.. ஒரு மாதம் கழித்து விலகிய மர்மம்.. கண்ணீர் மல்க கதறிய கணவர்!!
- "நான் ஒருத்தரை விரும்புறேன்".. நிச்சயமான மாப்பிள்ளையிடம் சொன்ன இளம்பெண் மாயம்.. விசாரணையில் தெரியவந்த நடுங்கவைக்கும் உண்மை!!