'இனி உதவி வேணும்னாலும் சொல்லுங்க' ... 'நான் பண்றதுக்கு ரெடி' .. அந்த 'மனசு' இருக்கே, அதான் சார் ... மாற்றுத்திறனாளிக்கு "விழுப்புரம் எஸ்.பி" செய்த நெகிழ்ச்சி காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். ஊரடங்கின் காரணமாக தினசரி கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராதாகிருஷ்ணன், வாட்ஸ்அப் குழு ஒன்றில் தனது குடும்ப நிலை குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். 'மாற்றுத்திறனாளியான எனக்கு இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக சென்னையில் நான் வேலை செய்து வந்த கம்பெனி மூடப்பட்டு எனக்கு பாதி மாத சம்பளம் கொடுத்தனர். தற்போது தேவையான மளிகை மற்றும் சமையல் பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறேன். மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் எனக்கு யாராவது உதவி செய்ய வேண்டும்' என தனது எண்ணையும் இணைத்து பதிவிட்டிருந்தார்.

விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் கவனத்திற்கு இந்த தகவல் செல்ல ஒரு மாதத்திற்கு தேவையான காய்கறிகள், அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வாங்கி கொண்டு நேராக ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று ராதாகிருஷ்ணனின் குடும்பத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'குடும்பத்தின் வறுமை காரணமாக வேறு வழி இல்லாததால் தான் வாட்ஸ்அப் மூலம் உதவி கேட்டேன். எஸ்.பி- க்கு இந்த தகவல் போக அவர் உடனடியாக வந்து எனக்கு உதவி செய்தார். இனிமேல் ஏதாவது உதவி தேவைப்பட்டால் உடனே என்னை தொடர்பு கொள்ளுங்கள் என சொல்லி சென்றார்' என்கிறார் நெகிழ்ச்சியாக.

ஊரடங்கு சமயத்தில் இது போன்று அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வழியில்லாமல் இருக்கும் மக்களுக்கு நல்ல மனது படைத்தவர்கள் பலர் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்