'தமிழகத்தில்' கொரோனாவால்... 'ஒரே நாளில்' 2 பேர் 'உயிரிழப்பு'... 3 ஆக 'உயர்ந்த' பலி எண்ணிக்கை...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக கொரோனா பாதிப்பால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த 51 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமானதை தொடர்ந்து இன்று காலை 7.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உலகமே நம்ம மேல காண்டுல இருக்கு'... 'இதுல நீங்க வேற'...சீன இளைஞருக்கு கிடைத்த அதிரடி தண்டனை!
- 'கொரோனா டெஸ்ட்ல 'நெகட்டிவ்'னு வந்தா... கொரோனா இல்லனு அர்த்தம் இல்ல!'... தமிழக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் விளக்கம்!
- ‘அம்மா இறந்திட்டாங்கன்னு போன் வந்தது’.. ‘லீவ் குடுத்தும் நான் ஊருக்கு போகல’!.. கண்கலங்க வைத்த காரணம்..!
- ‘பிரதமர் பேசுகிறார் என்றதும் அதிகம் எதிர்பார்த்தேன்’.. ‘ஆனால் நாம் என்றோ கையிலெடுத்த டார்ச்சுக்கே..!’ கமல்ஹாசன் ட்வீட்..!
- ஊரடங்கால் 'உச்சத்தை' எட்டிய விற்பனை... கடைசில மொத்த 'ஸ்டாக்கும்'... தீர்ந்து போச்சாம் மக்களே!
- ‘சடலங்களால் நிரம்பி வழியும் இறுதிச் சடங்கு கூடங்கள்’... ‘ஒரு வாரத்திற்கு முன்பே புக் செய்யப்படும் கல்லறைகள்’... ‘திணறும் இடுகாடு நிர்வாகிகள்’... ‘அமெரிக்காவை துடைத்து எடுக்கும் துயரம்!
- ஊரடங்கு சமயத்தில இவங்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகியிருக்காம்’.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..!
- 81 பேருடன் 'சென்னை முதலிடம்'... மாவட்ட வாரியாக வெளியான 'கொரோனா' பட்டியல்
- ‘இரண்டாம் உலகப் போரையே பார்த்தாச்சு’... ‘கொரோனா எல்லாம் நமக்கு’... ‘மீண்டு வந்து’... ‘104-வது பர்த்டே கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர்’!
- ‘10 பேருக்காவது கால் பண்ணுங்க’.. ‘அவங்கள வீட்ல இருக்க சொல்லுங்க’.. கொரோனாவில் இருந்து பாதுகாக்க முதல்வர் ட்வீட்..!