'குழந்தைகளுக்கு சயனைடு'...'என் நிலைமை யாருக்கும் வேண்டாம்'...உறைய வைக்கும் மரண வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தாயும், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை அதிரச்செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரையை சேர்ந்தவர் அருண். நகை தொழிலாளியான இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், பிரியதர்ஷினி(5), யுவஸ்ரீ(3) மற்றும் 3 மாத கைக்குழந்தையான பாரதி என 3 குழந்தைகள் இருந்தனர். இவர் தடை செய்யப்பட்ட மூன்றாம் நம்பர் லாட்டரிகளை அதிக அளவு வாங்கியதால் கடன் சுமையால் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்த அவர், தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு அதனை வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் மனைவியுடன் சேர்ந்து அருணும் விஷம் குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனிடையே இந்த கோர சம்பவம் குறித்து அறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது நகை தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடு சாப்பிட்டு அவர்கள் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதனிடையே தனது மரண வாக்குமூலத்தில் மூன்றாம் நம்பர் லாட்டரியை ஒழிக்க வேண்டும் எனவும், யாரும் அதற்கு அதற்கு அடிமையாகி விட வேண்டாம் எனவும் தனது மரண வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். லாட்டரி வாங்கி கடன் சுமை தாங்காமல் ஒட்டு மொத்த குடும்பமும் தற்கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
மொத்தம் 11... ஆனால் 'இறந்தவர்களின்' உடலில்... எந்தவொரு 'புல்லட்டும்' இல்லை.. பிரேத பரிசோதனை அறிக்கை!
தொடர்புடைய செய்திகள்
- ‘வயசு 26 ஆச்சு’!.. ‘ஆனா இன்னும் கல்யாணம் ஆகல’!.. மனவருத்தத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
- ‘கொலுசை அடகு வைத்து குடித்த கணவன்’! ‘மனைவி கொடுத்த கொடூர தண்டனை’.. விழுப்புரம் அருகே பரபரப்பு..!
- 'தம்பிக்கு என்ன ஆச்சுன்னு பாரு'...'கதவை திறந்த நண்பர்கள்'...உறைந்து நின்ற என்ஜினீயரிங் மாணவர்கள்!
- இனி ‘திருமணத்திற்கு முன்’.. ‘ஃபோட்டோ ஷூட்’ செய்யத் தடை.. அமைப்புகளின் அறிவிப்பால் ‘அதிருப்தியில்’ இளைஞர்கள்..
- 'ஒரு வரைமுறை வேணாமா?'.. 'இதெல்லாம் மெட்ரோவுல செய்ற காரியமா?'.. வைரலான வீடியோ.. வறுக்கும் நெட்டிசன்கள்!
- ‘ஒன்றரை வயது’ குழந்தையுடன்.. வீட்டுக்கு திரும்பும் வழியில்.. ‘இளம் தம்பதிக்கு’ நொடிப்பொழுதில் நடந்த ‘கோர விபத்து’..
- 'கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க?'.. இளம் பெண்ணின் விபரீத முடிவு.. தாலி கட்டியதும், ஓட்டம் பிடித்த கணவன்!
- ‘பணம் கேட்டு தொல்லை’!.. ‘விஷம் குடித்து பெண் தற்கொலை’.. போலீஸ் விசாரணையில் திருநங்கை..!
- 'பெட்ரூமில் 2 மகள்கள் கொலை'.. 'சுவரில் எழுதிவைத்துவிட்டு'.. '8வது மாடி பால்கனியில் இருந்து குதித்த குடும்பம்'!
- ‘விஷம் குடித்து தற்கொலை’! ‘காதலனிடம் கடைசியாக போனில் பேசிய இளம்பெண்’.. பரபரப்பு சம்பவம்..!