'அப்பாவ அடக்கம் பண்ணக்கூட வழியில்ல' ... தவித்து தனிமையில் நின்ற மகள் ... ஊர் மக்கள் இணைந்து எடுத்த முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தொழுவங்காடு பகுதியில் வசித்து வருபவர் பெரிய தம்பி. 78 வயதான பெரியசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் திடீரென இறந்துவிட்டார். பெரியதம்பியின் மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, அவரது மகள் மாரியம்மாள் மட்டும் உடனிருந்துள்ளார். தந்தையை அடக்கம் செய்வதற்கு கூட பணமில்லாமல் மாரியம்மாள் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையறிந்த தொழுவங்காடு பகுதி மக்கள் அனைவரும் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவி செய்ய முன்வந்தனர். மொத்தமாக சுமார் பத்தாயிரம் ரூபாய் வரை சேகரிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாக சில கிராம மக்கள் மட்டும் இணைந்து இறுதி சடங்கை முடித்து வைத்தனர். இறுதி சடங்கிற்கு வழியில்லாமல் நின்ற குடும்பத்திற்கு கிராம மக்கள் இணைந்து உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இதுகுறித்து தொழுவங்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'பெரியசாமி வாழ்ந்த வரையில் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை. நல்ல மனிதனாக இந்த பகுதியில் வாழ்ந்தவர். அவரது இறுதி சடங்கிற்கு இந்த நிலை வந்ததால் ஊர் மக்கள் அனைவரும் இணைந்து உதவி செய்ய முடிவு செய்தோம்' என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்