'1 கோடி Subscribers'... 'இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்திய கிரிக்கெட் பிரபலம்'... 'இத எதிர்பாக்கவே இல்லையே'... குவியும் பாராட்டு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்னிந்தியாவில் முதல் யூடியூப் சேனலாக 1 கோடி சந்தாதாரர்களைக் கடந்து வில்லேஜ் குக்கிங் சேனல் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

'1 கோடி Subscribers'... 'இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்திய கிரிக்கெட் பிரபலம்'... 'இத எதிர்பாக்கவே இல்லையே'... குவியும் பாராட்டு!

நமக்கான பாதையைத் தீர்மானித்து அதை நோக்கி உழைத்துக் கொண்டு சென்றால் வாழ்க்கையில் எந்த நிலைக்கும் செல்லலாம் என நிரூபித்துள்ளார்கள் வில்லேஜ் குக்கிங் சேனல். ஒரு சிறிய கிராமத்தில் ஆரம்பித்த இந்த பயணம் இன்று ஒரு கோடி சந்தாதாரர்களைக் கடந்து அசத்தியுள்ளது. இதற்காக அவர்கள் போட்ட மெனக்கெடல், மற்றும் உழைப்பு என்பது அசாத்தியமானது.

Village Cooking Channel reaches 1 crore YouTube subscribers

இன்னைக்கு ஒரு புடி என ஆரம்பிக்கும் இவர்களது வீடியோ பட்டி தொட்டியெங்கும் பிரபலம். எந்த அளவிற்கு என்றால், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இவர்களுடன் இணைந்து சமைத்து, சாப்பிட்டு மகிழ்ந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. ஒவ்வொரு முறை சமைக்கும்போதும், இவர்களுடைய கிராமத்துப் பேச்சு முறை மக்களை வெகுவாக கவர்ந்தது.  இந்த சேனலை தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி, சமையல்காரர்கள் குடும்பம் நடத்துகிறது.

இந்த சேனலை சின்ன வீரமங்கலம் ஏப்ரல் 2018 இல் தொடங்கினார், மேலும் அவரது பேரக்குழந்தைகளான முருகேசன், தமிழ்செல்வன், அய்யனார், முத்துமணிக்கம் மற்றும் சுப்பிரமணியன் மற்றும் பெரிய தம்பியும் இடம்பெற்றுள்ளனர். சுப்பிரமணியன் வணிகத்தில் எம்.பில் மற்றும் முத்துமணிக்கம் கேட்டரிங் படித்து இருந்தாலும் அவர்கள் தங்கள் தாத்தாவிடம் இருந்து சமையல் கற்றுக்கொண்டு, தாயின் வழிகாட்டலை மட்டுமே பின்பற்றுவதாகக் கூறுகிறார்கள்.

தற்போது தென்னிந்தியாவில் முதல் யூடியூப் சேனலாக 1 கோடி சந்தாதாரர்களைக் கடந்து வில்லேஜ் குக்கிங் சேனல் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த சாதனையைக் கொண்டாடும் விதமாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து 10 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளனர். இது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆகையால் பலரும் இந்த யூடியூப் சேனலுக்கு பாராட்டு தெரிவிக்க, டிவிட்டர் தளத்தில் #VillageCookingChannel என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் அஸ்வின் Village Cooking Channelக்கு Youtubeவில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இணையச் சேவை சரிவரக் கிடைக்காத கிராமத்தில் தொடங்கிய இவர்களது பயணம் இன்று உலக அளவில் ரசிகர்களைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. உழைப்பு என்ற மூலதனம் இருந்தால் வானத்தையும் வசப்படுத்தலாம்.

மற்ற செய்திகள்