‘சிரிக்காதீங்க மைனா’.. ‘பாடி லாங்வேஜ் பண்ணாதீங்க மகேஸ்வரி’.. ‘என்ன பண்ணுவீங்க விக்ரம்.?’.. TV Task-ல் வெடிச்சுது அடுத்த சண்டை.. bigg boss 6 tamil
முகப்பு > செய்திகள் > தமிழகம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார். இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தற்போது பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து டிவி டாஸ்கை செய்து வருகின்றனர். இந்த நிகழ்வில் அந்த டிவி, இந்த டிவி என இரு வகையான டிவியினராக அனைவரும் பிரிக்கப்பட்டு டிவி நிகழ்ச்சிகள், செய்திகள், விவாதங்கள் அனைத்துமே நடத்தப்பட்டன. இவற்றின் முடிவுகளை போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சில ஹவுஸ் மேட்ஸ் அறிவிக்கின்றனர்.
அப்படி விக்ரமன் தரப்பு தன் முடிவை அறிவிக்கும் போது தனலட்சுமி கேள்வி கேட்க, அதற்கு விக்ரமன் நேரம் எடுத்து விளக்கினார். இதுகுறித்து அசீம் கேட்க, அவருக்கும் விக்ரமன் விளக்கம் அளித்தார். இதனால் அசீம் & தனலட்சுமி இடையே வாக்குவாதம் சென்றது. கடைசியில் மைனா சிரித்தபடி விக்ரமனை அமரச் சொல்ல அதற்கு விக்ரமன், “எதற்காக எகத்தாளமாக சிரிக்கிறீர்கள்.. மரியாதை கொடுங்கள்” என்று சண்டையிட்டார்.
அப்போது கொதித்த மைனா, “நான் உங்களை சொல்லவில்லை, உங்களை கேலி பண்ணி சிரிக்கவில்லை.. எப்படி நீங்கள் நான் அப்படி செய்வதாக உங்கள் கருத்தை என் செயல் மீது திணிப்பீர்கள்?” என சண்டையிட்டார்.
அதற்குள் எதிரணியில் இருந்து அடுத்த முடிவை அறிவிப்பதற்கு மகேஸ்வரி வந்தார். அவர் விக்ரமனை அமர சொல்கிறார்.அப்போது விக்ரமுக்கும் மகேஸ்வரிக்கு வாக்குவாதம் வலுத்தது.
இதனை தொடர்ந்து மகேஸ்வரி, “உங்களை ஒன்றுமே சொல்லவில்லை விக்ரமன்.. நீங்கள் ஏன் தேவையில்லாமல் ஆஜராகிறீர்கள்?” என்று கூற, “என்னை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது மைனா சிரிக்கிறார். இது என் சம்பந்தப்பட்ட விஷயம்... இதற்கு நான் தான் ஆஜராக முடியும்.. மற்றவர்கள் எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று கூற, அப்போது தன்னுடைய உடல் மொழியால் மகேஸ்வரி ரியாக்ட் செய்தபடி பேசினார்.
அதற்கு, “இப்போ எதற்கு பாடி லாங்குவேஜ் செய்கிறீர்கள் மகேஸ்வரி?” என்று விக்கிரமன் கேள்வியெழுப்பினார். இதற்கு பதில் அளித்த மகேஸ்வரி, “அன்று தனலட்சுமி ஒருவிதமாக நின்று கொண்டு இருந்தார். அதுவும் அவருடைய பாடி லாங்குவேஜ் தான்.. அப்போது நீங்கள் எதுவும் சொல்லவில்லையே? அவரவர் உடல்மொழி அவரவருக்கானது” என்று குறிப்பிட்டார். முன்னதாக விக்ரமன் பேசும்போது, “இதே பாடி லாங்குவேஜை அசீம் செய்தார் என்று அன்று அனைவருமே கண்டித்தோம்.. இப்போது மகேஸ்வரி படி லாங்வேஜ் செய்யவில்லையா? இதை யாருமே பார்க்கவில்லையா?” என்று குறிப்பிட்டார்.
இப்படி விக்ரமன் - மைனா மற்றும் விக்ரமன் - மகேஸ்வரி ஆகியோரிடையே நடந்த இந்த சண்டை சிறு சிறு சண்டையாக இருந்தாலும் அந்த கொஞ்ச நேரம் பிக்பாஸ் வீட்டில் சரவெடி வெடித்தது என்று சொல்லலாம். போகப்போக பிக்பாஸ் வீடு ஒரு போர்க்களம் போல தீவிரமான சண்டைக் களமாக மாறுமா.. இல்லை, இந்த நிலை அடுத்தடுத்த வாரங்களில் மாறிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg boss 6 tamil : "பாலினத்தை கிண்டல் பண்ணாதீங்க.?".. ஒன்று சேர்ந்த விக்ரமன், அமுதவாணன், சிவின், தனலட்சுமி .. ரகளையான பிக்பாஸ் வீடு
- Bigg boss 6 tamil : “என் மகளே என்னை அங்கிள்னு கூப்பிட்டா.. அவளுக்கு நான் அப்பானு தெரியுமானு தெரியல” - பிக்பாஸில் ராபர்ட் கண்ணீர்.!
- Bigg boss 6 tamil: "ஒரு அண்ணன் தற்கொலை.. இன்னொரு அண்ணன் விபத்துல மரணம்".. ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தின் சோக பின்னணி.! பிக்பாஸில் உடைத்த அவரது சகோதரர்.!
- "நான் சனிக்கிழமை கெளம்பிடுவேன், இங்க இருக்குறது".. GP முத்து எடுத்த முடிவு.. வார இறுதியில் நடக்க போவது என்ன??
- Bigg boss 6 tamil : "ராசா.. கோடி கும்புடு".. Confession Roomல இருந்து மகிழ்ச்சியுடன் ஓடிவந்த GP முத்து.! தலைவர் கேட்ட உதவியை செஞ்ச ஹவுஸ்மேட்ஸ்?
- Bigg boss 6 tamil : "ஒரு வேளை சத்துணவு சாப்பாடாச்சும் கிடைக்கும்னுதான் School-ல சேர்த்தாங்க!".. மைனா நந்தினி உருக்கம்.!.. கதையை தொடர விடுவார்களா ஹவுஸ்மேட்ஸ்..?
- "ஓவியா கூட ஒருபடம் நடிச்சாச்சா.?".. GP முத்து சொல்லிய தகவல்.. ஆகா இதுதான் கேரக்டரா..?
- Bigg Boss Tamil : "இருக்குற வரை இருப்பேன்..".. குடும்பத்தை நினைத்து கேமரா முன் கலங்கிய GP முத்து..!
- Bigg Boss 6 Tamil : "எல்லாரையும் சிரிக்க வெப்பேன்.. ஆனா கண்ணு கலங்குது!" - ஹவுஸ்மேட்ஸ் இதயம் வென்ற அமுதவாணன்.. கமல் முன் நெகிழ்ச்சி ..
- Gp muthu : பிக்பாஸ் வீட்டில் காய்ச்சல் வந்து படுத்த GP முத்து..!! "கலகலனு இருந்த மனுஷன்".. bigg boss 6 tamil