"நீங்க டைட்டில் வின்னர் இல்ல, Total Winner".. விக்ரமனுக்கு 'திருமாவளவன்' கொடுத்த பெயர்.. கூடவே கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் அமோகமாக நடந்து முடிந்திருந்தது.

Advertising
>
Advertising

Also Read | PADMA AWARDS : RRR இசையமைப்பாளர் கீரவாணி, KGF நடிகை ரவீனா டாண்டன் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள்..!

மொத்தம் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் அனைவருமே அசத்தலாக ஆடியும் வந்தனர். இதனால் ஒவ்வொரு எபிசோடுகளும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.

இதற்கு மத்தியில், ஏராளமான டாஸ்க்குகளையும் பிக் பாஸ் கொடுக்க அது தொடர்பான பல்வேறு வாக்குவாதங்களும் சண்டைகளும் அடுத்தடுத்து நடந்து கொண்டே இருந்தது. அதே வேளையில் மற்ற நேரத்தில் மிகவும் கலகலப்பாகவும் ஒவ்வொரு போட்டியாளர்களும் இருந்து வந்தனர்.

இறுதியில் 21 போட்டியாளர்களில் இருந்து அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேரும் ஃபினாலேவுக்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். அதில் அசிம் இந்த பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் அறிவிக்க, இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததையடுத்து அனைவரும் வெளியே வந்து உற்சாகமாகவும் வலம் வருகின்றனர். இதே போல பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தாலும் அவருக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக சமீபத்திய பேட்டிகளிலும் அவர் குறிப்பிட்டு வருகிறார்.

இந்த நிலையில், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து அவரிடம் இருந்து வாழ்த்து பெற்றுள்ளார் விக்ரமன். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் விக்ரமன் இருக்கும் போது அவருக்கு வாக்களிக்கும் படி, திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த விக்ரமன், தொல். திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்ரமன், "தலைவர்
@thirumaofficial அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். கட்டித்தழுவி வரவேற்று “அற வேந்தன்” புத்தர் சிலை பரிசளித்தார். இதைவிட உயரிய பரிசு வேறென்ன இருக்க முடியும். நெகிழ்ச்சியான தருணம். #அறம்வெல்லும்" என குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, விக்ரமனுடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ள திருமாவளவன், "அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த தம்பி @RVikraman அவர்களை வரவேற்று வாழ்த்தினேன். பொழுது போக்குத் தளமெனினும் அதனைக் கருத்தியல் களமாக்கிய சாதனையைப் பாராட்டினேன். நீங்கள் #TITLE_WINNER அல்ல; #TOTAL_WINNER என ஆரத்தழுவி மெச்சினேன். ஆடைபோர்த்தி அறவேந்தன் சிலை பரிசளித்தேன். #BiggBoss" என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளராக விக்ரமன் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | வருங்கால மனைவியோடு அடுத்தடுத்து இரண்டு பிரபல கோயில்களில் சாமி தரிசனம் செய்த ஆனந்த் அம்பானி..! வீடியோ

VIKRAMAN, THIRUMAVALAVAN, THO THIRUMAVALAVAN, BIGG BOSS 6 FINALE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்