“தமிழ்நாட்டில் வடமாநிலத்தோர் மாதம் ரூ.40 கோடி சம்பாதிக்கிறார்கள்.. தமிழக இளைஞர்களுக்கு வேலை கொடுக்க நாங்கள் தயார்” - வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா .

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் வடமாநில கூலித்தொழிலாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் தமிழக இளைஞர்களுக்கு வணிகர் சங்க தலைவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertising
>
Advertising

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரசவ வலியால் துடிச்ச பெண் பயணி.. ஒரே போன்கால்.. பரபரப்பான ரயில்வே ஸ்டேஷன்..!

தமிழகத்தில் அண்மைக் காலமாகவே வட மாநில தொழிலாளர்கள் பற்றிய பேச்சு அதிகரித்திருக்கிறது. சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களின் வருகை அதிகமாக இருப்பதாகவும் இதனால் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக கட்டுமான தொழில்களில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலார்கள் அதிக அளவில் கூலி தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். மேலும், தமிழகத்தின் அனைத்து ரயில்வே நிலையங்களிலும் வடமாநில மக்களின் வருகை அதிகரித்திருப்பது பற்றியும் சமூக வலை தளங்களில் பலரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக நெறிமுறைகளை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் தமிழக வணிகர் சங்கத் தலைவர் விக்கிரம ராஜா இதுபற்றி பேசி உள்ளார்.  செய்தியாளர்களை சந்தித்த அவர்,"வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது. இளைஞர்கள் ஒயிட் காலர் வேலையை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம், எங்களுடைய காலத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு பணியாற்றியிருக்கிறோம். இப்போது வேலை தருவதற்கு, நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை."

Images are subject to © copyright to their respective owners.

"தமிழ்நாட்டில் வேலை இல்லை, என்று தன்னை ஏமாற்றிக் கொள்ளாமல் வேலை வாய்ப்புகளை தேட தமிழக இளைஞர்கள் முன் வர வேண்டும். வேலை கொடுப்பதற்கு வணிகர்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம். இங்குள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு மாதம் 40 கோடி ரூபாயை சம்பளமாக கொடுக்கிறோம். அதனை அவர்கள் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதனால் தான் வடமாநிலங்களில் வணிகம் அதிகரிக்கிறது. இங்கு வணிகம் பின்தங்கி உள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால் வடக்கு வளர்கிறது. தெற்கு தேய்கிறது. இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read | 2 மாசம் கடுமையான வயிற்று வலி.. இளைஞரை ஸ்கேன் செஞ்சு பார்த்துட்டு அதிர்ந்துபோன மருத்துவர்கள்.. ஆத்தாடி இவ்வளவா..?!

VIKRAMA RAJA, YOUNGSTERS, JOBS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்