திருமண பந்தத்தில் நுழையும் 'கேப்டன்' மகன்.. வைரலாகும் 'நிச்சயதார்த்த' புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்துக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என 2 மகன்கள் உள்ளனர். இதில் விஜய பிரபாகரன் விரைவில் திருமண பந்தத்தில் நுழையவிருக்கிறார்.
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் இளங்கோ. இவரது மகள் கீர்த்தனா. இவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கோவை சிங்காநல்லூரில் வைத்து விஜய பிரபாகரனுக்கும்-கீர்த்தனாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நிச்சயதார்த்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. புகைப்படங்களை பார்த்த விஜயகாந்தின் ரசிகர்கள் நிச்சயதார்த்த தம்பதியை மனதார வாழ்த்தி வருகின்றனர். இந்த நிகழ்வில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- பிறந்தநாளன்று ‘கம்பேக் கொடுத்த விஜயகாந்த்’.. ‘களைகட்டிய கொண்டாட்டங்கள்’.. ‘உற்சாகத்தில் தேமுதிக தொண்டர்கள்’..
- பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா விஜயகாந்த்? என்ன சொல்கிறார்கள் டாக்டர்கள்?
- ‘புல்வாமா தாக்குதலை நடத்தியது மோடியா?’.. ரோல் ஆன பிரேமலதா.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
- ‘ஒளிமயமான எதிர்காலம்’ எம்ஜிஆர் பட பாடலா?.. பிரேமலதா கூறியது என்ன?
- ‘ஒரு மணப் பொண்ணு இருந்தா 10 பேர் வந்து கேப்பாங்கதான்’: பிரேமலதா விஜயகாந்த்!
- சமக-வின் நிலைப்பாடு இதுதான்: விஜயகாந்தை சந்தித்த சரத்குமார் பரபரப்பு பேட்டி!